விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சொல்லீர் என் அம்மானை*  என் ஆவி ஆவிதனை,* 
    எல்லை இல் சீ* ர் என் கருமாணிக்கச் சுடரை,*
    நல்ல அமுதம்*  பெறற்கு அரிய வீடும் ஆய்,* 
    அல்லி மலர் விரை ஒத்து*  ஆண் அல்லன் பெண் அலனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் அம்மானை - எனக்கு ஸ்வாமியாய்
என் ஆவி ஆவி தனை - என் ஆத்மாவுக்கும் ஆத்மாவாயிருப்பவனாய்
எல்லை இல் சீர் - எல்லையற்ற குணங்களையுடைய
என் கரு மாணிக்கம் சுடதை சொல்லீர் -  எனது நீலரத்னம் போன்ற      வொளியுருவையுடையனான பெருமானை சொல்லுங்கள்.
நல்ல அமுதம் - நல்ல அம்ருதமர்ய்

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “சொல்முடிவு காணேன் நான் சொல்லுவதென் சொல்லீரே” என்று தமக்கு எம்பெருமானைப் பேச முடியாமையாலே பேசவுந் தவிர்ந்த ஆழ்வார்பின்னையும் தம்முடைய நப்பாசையினால் ஸம்ஸாரி யளையழைத்து என்னாயனான ஸர்வேச்வரனை எல்லாருங் கூடியாகிலும் ஒருவடிசொல்லுவோமே! என்கிறார். என் அம்மானைச் சொல்லீர்- அற்பவிஷயங்களை யநுபவித்து அவற்றைப் பரக்கப் பேசித்திரிகிற ஸம்ஸாரிகளே! எம்பெருமானைப்பற்றிச் சிறிது சொல்லுங்கோள் என்கிறார். ஸ்ரீவைஷ்ணவர்களை விளித்துச் சொல்லுகிறதாகவுங் கொள்ளலாம் என் ஆவி ஆவிதனை-(இதுமுதல் எம்பெருமானுக்கு விசேஷணங்கள்) என் உயிர்க்கும் உயிராயிருப்பவன் என்றபடி. அதாவது-சரீரரத்தினுள்ளே ஆத்மா அந்தர்யாமியாயிருந்துகொண்டு அதனை எப்படி ஆள்கின்றானோ அப்படி அந்த ஆத்மாவிலுள்ளும் அந்தர்யாமியாயிருத்துக்கொண்டு, அவனையும் ஆள்பவன் பரமாத்மா என்றபடி.

English Translation

My Lord of infinite goodness, my good ambrosia, is the rare bliss of liberation, sweet as the fragrant lotus flower. My Lord of black gem lustre, my soul's keeper, is neither male nor female. Oh, How shall I speak of him?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்