விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பொன் முடி அம் போர் ஏற்றை*  எம்மானை நால் தடம் தோள்,* 
  தன் முடிவு ஒன்று இல்லாத*  தண் துழாய் மாலையனை,* 
  என் முடிவு காணாதே*  என்னுள் கலந்தானை,* 
  சொல்முடிவு காணேன் நான்*  சொல்லுவது என் சொல்லீரே.   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பொன் முடி - பொன் மயமான திருமுடியை யுடையனாய்
அம் போர்ஏற்றை - அழகிய போரேறு போன்றவனாய்
எம்மானை - எனக்கு நாதனாய்
நால் தட தோள் - நான்கு பெரிய திருத்தோள்களை யுடையவனாய்
தன் முடிவு ஒன்றும் இல்லாத-  தன் பெருமைக்கு முடிவு ஒன்றுமில்லாதவனாய்

விளக்க உரை

எம்பெருமான் பராத்பரனாயிருந்து வைத்து என்னுடைய தாழ்ச்சியைக் கணிசியாதே என்னோடே வந்து கலந்த பெருங்குணத்தை நான் பேசவல்லேனல்லேனென்கிறார். உபயவிபூதிக்கும் தானே நாதன் என்பது விளங்கத் திருவபிஷேக மணிந்தவனாய், மிகவும் செருக்கையுடைய ஏறுபோலே மேனாணித்திருப்பவனாய், தன்னுடைய குண சேஷ்டிதங்களாலே என்னை அடிமை கொண்டவனாய், அழகிய திருத்தோள்கள் நாலையுமுடையவனாய், ஸர்வேச்வரத்வஸூசகமாய்ப பரம போக்கியமான திருத்துழாய் மாலையை யணிந்தவனாய், என்னுடைய எல்லை காணவொண்ணாத தாழ்ச்சியைப் பாராதே என்னுள்ளே கலந்தவனான பெருமானை நான் ஒருபடி அநுபவிப்பது தவிர, பாசுரமிட்டுச் சொல்லும் பாரிசு அறிகிலேன். விஷயாந்தரங்களை யநபவித்து அவ்வநுபவத்திற்குப் பாசுரமிட்டுச் சொல்லுகின்ற உங்கயைப் போலே இவ்விஷயத்தில் நான் ஒரு பாசுரமிட்டுச் சொல்லமாட்டுகிறிலேன் என்றவாறு.

English Translation

My Lord, -that angry bull, -wears a Tulasi wreath over his golden crown. He has four beautiful arms and infinite virtues. Heedless of my lowliness, he made love to me, I have no words to describe him; what shall I say, tell me?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்