விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பாம்பு அணைமேல் பாற்கடலுள்*  பள்ளி அமர்ந்ததுவும்,* 
    காம்பு அணை தோள் பின்னைக்கு ஆய்*  ஏறு உடன் ஏழ் செற்றதுவும்,*
    தேம் பணைய சோலை*  மராமரம் ஏழ் எய்ததுவும்,* 
    பூம் பிணைய தண் துழாய்ப்*  பொன் முடி அம் போர் ஏறே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பால் கடலுள் - திருப்பாற் கடலிலே
பாம்பு அணை மேல் - சேஷசயனத்தின் மீது
பள்ளி அமாந்ததுவும் - கண்வளர்தல் பொருந்தினதும்.
காம்பு அணை தோள் பின்னைக்கு ஆய் - மூங்கில் போன்ற தோள் களையுடைய நப்பின்னைப் பிராட்டிக்காக
ஏழ் ஏறு - ஏழு ரிஷபங்களை

விளக்க உரை

போர்ஏறு - போர்க்குரிய இடபம் போன்றவனுமான எம்பெருமான் (செய்த செயல்களாம்.) எம்பெருமான் சில திவ்விய சேஷ்டிதங்களைத் தமக்குக் காட்டியருளக் கண்டு அநுபவித்துப் பேசுகிறார். பாற்கடலுள் பாம்பணைமேல் பள்ளியமாந்ததுவும்=வெள்ளை வெள்ளத்தின் மேலொரு பாம்பை மெத்தையாக விரிதது அதன்மேலே கள்ள நித்திரை கொள்கின்றதும் எங்கள் பெருமானே. பின்னைக்காய் ஏறுடனேழ் செற்றது-யசோதைப் பிராட்டிக்கு உடன்பிறந்தவனான கும்பனென்னும் இடையர் தலைவனது மகளும், நீளாதேவியின் அம்சமாகப் பிறந்தததனால் நீறா என்ற பெயரால் வழங்கப்பட்டு வருபவளுமான நப்பின்னை பிராட்டியை மணஞ்செய்து கொள்ளுதற்காக அவள் தந்தை கந்யாசுல்கமாகக் குறித்தபடி யாவர்க்குமடங்காத அஸூராவேசம் பெற்ற ஏழு எருதுகளையும் கண்ணபிரான் ஏழு திருவுருக்கொண்டு சென்று வலியடக்கி அப்பிராட்டியை மணஞ்செய்து கொண்டனன் என்பது வரலாறு. எம்பெருமானால் முன்யுகத்தில் கொலையுண்ட காலநேமியென்னும் அஸூரனுடைய புத்திரர்கள் எழுவர் கறுக்கொண்டு கண்ணபிரானை வதஞ்செய்யக்கோலி, இந்த ஏழுகாளைகளாகப் பிறந்தார்களென்று ஹாரிவம்சம் கூறும்.

English Translation

The cool-blossomed Tulasi-garland Lord, -that angry bull, -wears a crown. He reclines in the Milk ocean on a hooded serpent couch. He killed seven bulls to win the bamboo-like-arms-Nappinnal. He pierced seven dense dew-dripping trees for Sita's love.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்