விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பலபலவே ஆபரணம்*  பேரும் பலபலவே,* 
  பலபலவே சோதி*  வடிவு பண்பு எண்ணில்,*
  பலபல கண்டு உண்டு*  கேட்டு உற்று மோந்து இன்பம்,* 
  பலபலவே ஞானமும்*  பாம்பு அணை மேலாற்கேயோ.        

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பாம்பு அணை மேலாற்கு - ஆதிசேஷனைப் பள்ளியாகக் கொண்டிருக்கும் பெருமானுக்கு
பண்பு எண்ணில் - (என்னோடு கலவியாலுண்டான அழகை) நிரூபித்துப் பார்க்குமிடத்து,
ஆபரணம் - திருவாபரணங்கள்
பலபல - மிகப் பலவாயிருக்கும்
சோதி வடிவு - ஒளியுருவான திருமேனி

விளக்க உரை

ஆழ்வார் தம்மோடே எம்பெருமான் கலக்கும்போது ஒரு வடிவோடே கலந்து த்ருப்தி பெற மாட்டாதே பலவடிவுகள் கொண்டு கலந்து அநுபவிக்கும் படியை அருளிச்செய்கிறார். பாம்பணை மேலாற்கு என்றது திருவனந்தாழ்வானைப் படுக்கையாகக் கொண்டாப்போலே என்னோடு பெருமானுக்கு என்றபடி. பண்பு எண்ணில் --அவனுடைய ஸ்வபாங்களை ஆராய்ந்து பார்த்தால், ஆபரணம் பலபல = “செங்கமலக்கழலில் சிற்றிதழ்போல் விரலில் சேர்திக ழாழிகளும் கிண்கிணியும் அரையில் தங்கிய பொன்வடமும் தாள நன்மாதுளையின் பூவொடு பொன்மணியும் மோதிரமுங் கிறியும் மங்கல வைம்படையுந் தோள்வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும்” என்கிறபடியே திருவாபரணங்கள் எண்ணிறந்தவை. பேரும் பலபலவே ஸ்ரீ அவனுடைய திருக்குணங்களுக்கும், திருவவதாரங்களுக்கும் திவ்ய சேஷ்டிதங்களுக்கும், வாசகங்களான திருநாமங்களும் பலபலவாயிருக்கும். அநுபவிக்குங் காலத்தில் நாமக்ரஹணத்திற்கு இழிந்தவிடமெல்லாம் துறையாகும். சீலப்பேர்கள் வீரப்பேர்கள் என்று அநேகமாயிருக்குமே.

English Translation

My Lord reclines on a serpent, let me count his ways. His ornaments are many, his names are many, his lustrous forms are many, their sensations too are many, through seeing, eating, touching, hearing and smelling, he give me pleasure.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்