விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து*   பேணி நம் இல்லத்துள்ளே* 
  இருத்துவான் எண்ணி நாம் இருக்க*  இவளும் ஒன்று எண்ணுகின்றாள்* 
  மருத்துவப் பதம் நீங்கினாள் என்னும்*  வார்த்தை படுவதன்முன்* 
  ஒருப்படுத்து இடுமின் இவளை* உலகளந்தான் இடைக்கே.*

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பெருபெருத்த - மிகவும் விசேஷமான;
கண்ணாலங்கள் செய்து - கல்யாண காரியங்களைச்செய்து;
பேணி - அன்பு பூண்டு;
நம் இல்லத்துள்ளே - நம் வீட்டுக்குள்ளேயே;
இருந்துவான் எண்ணி நாம் இருக்க - (இவளை) இருக்கச் செய்ததாக நாம் நினைத்திருக்க;

விளக்க உரை

இப்பெண்பிள்ளைக்கு அவ்வக்காலங்களில் செய்யவேண்டிய மங்கள காரியங்களை விசேஷ விபவமாகச்செய்து மிக்க அன்பு பாராட்டி நம் அகத்திலேயே இவளை வளர்ப்பதாக நினைத்திருக்கும் நமது நினைவுக்கு நேர்மாறுபாடாக இவள் வெளிப்புறப்பட்டு ஓடுவதாக நினைத்திருக்கின்றாளே! என்று கலங்கிக் கூறின தாயை நோக்கி; பந்துக்கள், அங்ஙனாகில் இவளை இப்போதே கண்ணபிரானிடத்திற் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுதலே தகுதியாம்; அல்லாவிடில் வைத்யன் தான் செய்கிற ஒளஷதத்தில் பாகம்பார்த்துச் செய்யாதபோது, அம்மருந்து கைதவறிப் போவது போல, இவள்பதம்பார்த்து நாம் செய்யாமையாலே இவள் கைகழியப் போனாள் என்று பெருத்ததொரு லோகாபவாதம் பரவி விடுமென்று-கர்த்தவ்ய நிரூபணம்பண்ணிக் கூறியபடியைத் தாய் கூறினளென்க.

English Translation

“With big lavish celebrations we thoughts we could keep her safely inside our home, but she has been having other thoughts. Before she brings more blame by exceeding the physician’s measure, unite her to the Lord who measured the Earth”

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்