விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆரா அமுதமாய்*  அல் ஆவியுள் கலந்த,* 
    கார் ஆர் கருமுகில் போல்*  என் அம்மான் கண்ணனுக்கு,*
    நேரா வாய் செம்பவளம்*  கண் பாதம் கை கமலம்,* 
    பேர் ஆரம் நீள் முடி நாண்,*  பின்னும் இழை பலவே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆரா அமுதம் ஆய் - தெவிட்டாத அமுதமர்கி
அல் ஆவி உள் - ஒரு பொருளல்லாத எனது நெஞ்சினுள்ளே
கலந்த - கூடி நின்றவனாயும்
கார்ஆர்கருமுகி போல் - கார்காலத்தில் பொருந்திய காளமேகம் போன்ற வனாயும்
என் அம்மான் - எனக்கு நாதனாயு மிருக்கிற

விளக்க உரை

எம்பெருமான் என்னோடு கலந்ததனால் பெற்ற அழகுக்கு உபமான மில்லை என்கிறார். இதுவரையில் தாமரையை உபமானமாகச் சொல்லிக் கொண்டு வந்தார்; உட்புகுந்து ஆராய்ந்தவாறே உபமானமாகப் போந்ததில்லை; சீ! என்று தள்ளிப்பேசுகிறார். பரமபோக்யனாயிருந்துவைத்து மிகவும் நீசனான் என்னோடே கலப்பதுஞ் செய்து, அத்தாலே கார்காலத்தில் ஆர்த்த தருமுகில் போலே விளக்கம் பெற்றவனான எம்பெருமானுக்கு, செம்பவளமானது திருவாயோடு ஒப்பாகமாட்டாது; கமலானது கண் பாதம் கைகளோடு ஒப்பாகமாட்டாது, அன்றியும், திருமார்பில் அணிந்திருத்த ஹாரமும், தானே உபயவிபூதிக்கும் நிர்வாஹகனென்பது தோன்றத் திருமுடியிலணிந்திருந்க திருவபிஷேகமும் திருவாரை நாணும்முதலான திருவாய்பரண்ங்கள் அநுபவித்துப் போமித்தனையல்லது என்னாற்சொல்லித் தலைக்கட்டப்போகா

English Translation

My Krishna of dark gem hue, my tall-garland ambrosia, has a high radiant crown, the sacred thread and many befitting ornaments on him. He made love to such an insignificant thing as me. Red corals cannot match his lips, nor lotus steal over his eyes, hands or feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்