விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  எப் பொருளும் தான் ஆய்*  மரகதக் குன்றம் ஒக்கும்.* 
  அப்பொழுதைத் தாமரைப்பூக்*  கண் பாதம் கை கமலம்,*
  எப்பொழுதும் நாள் திங்கள்*  ஆண்டு ஊழி ஊழிதொறும்,* 
  அப்பொழுதைக்கு அப்பொழுது*  என் ஆரா அமுதமே.      

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

எப்பொழுதும் - எல்லா கூஷணமும்
எந்நாள் - எல்லா நாட்களும்
எத்திங்கள் - எல்லா மாதங்களும்
எவ்வாண்டு - எல்லா வருஷங்களும்
எவ்வூழி ஊழி தொறும் - கற்பங்கள் தோறும் (அது பவித்தாலும்)

விளக்க உரை

என்னோடே கலந்த எம்பெருமான் யாவஜ்ஜீவம் அநுபவித்தாலும் கூஷணந்தோறும் புதியனாய்ப் பரம போக்யணாயிரா நின்றானே யென்று உள் குழைகின்றாரிதில். இப்பாசுரத்திற்கு நம்பிள்ளையீட்டில் இட்டருளின அவதாரிகை பரமபோக்யம். “நீர்ஒருகால் சொன்னதை ஒன்பதின் கால் சொல்லி இங்ஙனே கிடந்து படுகிறதென்னென்ன, நான் அது தவிருகிறேன்; நீங்கள் அவ்விஷயம் ஒருகாலிருந்தபடியே எப்போது மிருக்கும்படி பண்ணவல்லிகோளோ வென்கிறார்.” என்பது அந்த ஸ்ரீஸூக்தி. “செந்தாமரை கண் கமலம்” என்றும் “செங்கனிவாய் செங்கமலம்” என்றும் ‘கண் பாதம் கை கமலம்” என்றும் “செங்கனிவாய் செங்கமலம்” என்றும் ‘கண் பாதம் கை கமலம்” என்றும் திருப்பித்திருப்பிப் புநருக்தி பண்ணிக்கொண்டிருக்கிறீரே, இது வென்ன என்று சிலர் கேட்க, நான் சொல்லுகிற சொற்களும் ரஸிகர்களுக்கு நித்யாபூர்வமாகவே யிருக்கும். புநருக்தியாகத் தோன்றாது என்று ஆழ்வார்ஸமாதாநம் பண்ணுகிறாரென்பது உள்ளுறை. எல்லாப் பொருள்களும் தானிட்டவழக்காம்படி யிருக்கிறவன் என்னோடே வந்து கலந்து மிகவும் ஒளிபெற்றனாகையாலும் திருவளர்த்தியினாலும் என்னை விட்டுப் போகாதே நிற்கையாலும் ஒரு மரகதமலையோ என்னலாம்படி யிராநின்றாள். அவனது திருக்கண்களும் திருவடிகளும் அப்போ தலர்ந்த செந்தாமரைப் பூப்போன்றன; கைகளும் கமலம், ஸர்வகாலமும் எனக்கு அபூர்வ வஸ்துபோலே புதியனாயிராநின்றானேயன்றிக் தெவிட்டுகின்றானில்லை; இப்படியும் ஒருபோக்யதையே! என்று ஈடுபடுகியராயிற்று.

English Translation

The Lord is himself all, his frame is like a huge dark gem. His eyes and feet and hands are like freshly opened lotus flowers. Every moment, every day, every month, every year, every age, age after age, my insatiable ambrosia flows like fresh juice, just made.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்