விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    என்னுள் கலந்தவன்*  செங்கனி வாய் செங்கமலம்,* 
    மின்னும் சுடர் மலைக்குக்*  கண் பாதம் கை கமலம்,*
    மன்னும் முழு ஏழ் உலகும்*  வயிற்றின் உள,* 
    தன்னுள் கலவாதது*  எப் பொருளும் தான் இலையே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என்னுள் கலந்தவன் - என்னுள் கலந்த வனாகி
மின்னும் - விளங்குகின்ற
சுடர்மலைக்கு - ஒளிபொருந்திய மலை போன்ற பெருமானுக்கு
செம் கனி வாய - சிவந்து கனிந்த திருவாய்
செம் கமலம் - செந்தாமரை மலர் போன்றது;

விளக்க உரை

பிராட்டி பிரமன்சிவன் முதலானார் மாத்திர மன்றியே ஸகலலோகங்களும் தன்னைப்பற்றி ஸத்தை பெறும்படி யிருக்கிற எம்பெருமான், இவ்வுலகங்களெல்லாம் தன்னை யொழிந்தால் படும்பாட்டைத் தான் என்னைப் பிரிந்து பட்டு என்னோட கலக்கையாலே மிகவும் பஷ்கலனானான் என்கிறாரிடத்தில். எம்பெருமானுக்கு இப்போது ‘என்னுள் கலந்தவன்’ என்று ஒரு திருநாமம் கிடைத்தது போலும். அஞ்சிறைய மடநாரையில் ‘அருளாதநீர்’ என்று திருநாமம் சாத்தினார்; இப்போது ‘என்னுள் கலந்தவன்’ என்று திருநாமம் சாத்துகிறார். நாரயணன் வாஸூதேவன் என்கிறாப் போலே இதுவும் ஒரு திருநாமங்காண்மின். என்னுள்ளே கலந்தவனாய் அத்தாலே விளங்கின சுடரையுடைய மலை போன்றுள்ளவனான பெருமானுக்கு, செங்கனியாய் செங்கமலம், கண் பாதம், கை கமலம். இப்போது எம்பெருமானுடைய திவ்யாவயவங்கள் புகர் பெற்றபடியை எத்தனை தடைவ வருணித்தாலும் ஆழ்வாருக்கு த்ருப்தி பிறக்கிறதில்லை.

English Translation

The Lord who made love to me has a frame like a lustrous mountain. His coral lips and red eyes his hands and his feet are like lotuses. All the sever worlds are contained in his frame; not a thing lies outside him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்