விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஏழை பேதை*  இராப்பகல்,*  தன 
  கேழ் இல் ஒண்*  கண்ண நீர் கொண்டாள்,*  கிளர்
  வாழ்வை வேவ*  இலங்கை செற்றீர்.*  இவள் 
  மாழை நோக்கு ஒன்றும்*  வாட்டேன்மினே      

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கிளர் - விஞ்சின
வாழ்வை - (இராவணனது) செல்வம்
வேவ - நீறாகும்படி
இலங்கை - லங்காபுரியை
செற்றீர் - அழித்தவரே!

விளக்க உரை

இப்பெண்பிள்ளை திறத்திலே பெரும்பாலும் எல்லாம் ஒடுங்கிப் போயிற்று; இவளுடைய நோக்கு ஒன்றுதான் சேகூஷித்துக்கிடக்கிறது; அஃதொன்றுமாவது குலையாதபடி நீர்நோக்கிக்கொள்ளவேணுமென்று பிரார்த்திக்கின்றாள். ஏழை--ஸூலபமான வஸ்துக்களிற்போலே துர்லபமான வஸ்துக்களிலும் ஈசைவைக்குமவள் என்றபடி. பேதை-‘இது நமக்கு துர்லபம்’ என்றறிந்தாலும் ஆசையை விடமாட்டாத இளம்பருவமுடையவளென்கை. ஆத இப்படிப்பட்ட இவள் இரவும் பகலும் கண்ணுங் கண்ணீருமுர்க இருக்கின்றாள். (தாமைரையிலே முத்துப்பட்டாற்போலே இக்கண்ணுங் கண்ணீருமாயிருக்கிற விருப்பபைக் காட்டிலெறித்த நிலாபவாக்காமல் நீர்ஒடிவந்து காணவேண்டாவோ? “ஆஹ்லாத ஸர்வதேஹிபி; புலகீக்ருத காத்ரவாந், ஸதா பரகுணவிஷ்ட; பண்ணின த்ருஷி பலித்த் வளவிலே வந்து அநுபவியாதே உவேக்ஷையாயிருக்கலாமோ? என்பது உள்ளுறை.)

English Translation

This poor girl stands by night and day with tears we welling in her eyes. O Lord who destroyed Lanka's fabulous wealth, pray spare her innocent looks at least!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்