விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வஞ்சனே என்னும்*  கைதொழும்,*  தன 
    நெஞ்சம்வேவ*  நெடிது உயிர்க்கும்,*  விறல்
    கஞ்சனை*  வஞ்சனை செய்தீர்,*  உம்மைத் 
    தஞ்சம் என்று*  இவள் பட்டனவே.     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கை தொழும் - (அந்த நன்றிக்குத் தோற்றுக்) கைகூப்புகின்றாள்
தன நெஞ்சம் - தனது நெஞ்சு
வேவ - வேகும்படியாக
நெடிது உயிர்க்கும் - பெருமூச்செறிகின்றாள்;
விறல் கஞ்சனை - மிடுக்கனான கம்ஸனை

விளக்க உரை

உம்மை ஆச்ரயமாகப் பற்றியிருக்கமிவள் பிரதிகூலர் பட்டபாட்டைப்படுவது தகுதியோ? என்கிறாள். கீழே “எனகள்விதான் பட்ட வஞ்சனையே” என்று தாய்சொன்ன வார்த்தையைக்கேட்டுப் பொறாதமகள் அவனுடைய வஞ்சனையை நற்றமாகக் கொள்ள வேண்டியிருக்கக் குற்றமாகக்கொள்ளலாமோ என்றகருத்தினால் தன் வாயாலே வஞ்சனே! என்று சொல்லித் தொழுகின்றாளாம். என்னை மடிமாங்காயிட்டுப் பிடித்து வசப்படுத்திக் கொண்ட பிரானாயிற்றே என்று உபகார ஸ்ம்ருதி பண்ணி, அந்த உபகாரத்திற்குத் தோற்று அஞ்சலிபண்ணுகின்றாளென்க.முன்னமே உலர்ந்திருக்கிற நெஞ்சம் விரஹாக் நியாலே வேம்படி நெடுமூச்செறியா நின்றாள். மிடுக்கையுடைய கம்ஸன் நினைத்த நினைவு அவனோடே போம்படிபண்ணி அவனை முடித்தீர்; உம்மைத் தோற்பிக்க நினைத்தவர்களை நீர்தோற்பிக்கின்றவராயிருந்தீர்; பிரதிகூலர்களிடத்திலே வெற்றிபெறுவதும் அநுகூலர்களிடத்திலே தோல்விபெறுவதும் உமக்கு ப்ராப்தமர்யிருக்க இரண்டிடத்திலும் வெற்றி உம்முடையதாகவே யிருக்கத்தகுமோ? உம்மையே தஞ்சமாகப் பற்றினவிவள் இப்பாடுபடலாமோ? என்கிறாள். இவள் பட்டனவே=இவள் படும்பாடுகளைச் சொல்லப்புகுந்தால் ஒரு மஹாபாரதத்திற்காகும் போலும். ஸம்ஸாரிகளைப்போலே* உண்டியே உடையே உகந்தோடித்திரியும்படியாக வைத்தீரல்லீர்; நித்யமுக்தர்களைப்போலே நித்யாநுபவம்பண்ண வைத்தீருமல்லீர்; எங்களைப்போலே “தத் தஸ்ய ஸத்ருசம் பவேத்” என்று ஸ்வரூபாநுஸந் தாநம்பண்ணி ஆறியிருக்கவைத்தீருமல்லீர்; கம்ஸனைப்போலே முடியச் செய்தீருமல்லீர்; என்வழி வாராதே உம்மையே தஞ்சமாகப்பற்றின விவளை எத்தனைபடுத்த வேணும்!

English Translation

"O, Deceiver!", she calls and joins her hands, She sighs hotly, with a heavy heart she cries, "O Destroyer of the powerful Kamsa!". Alas, the suffering she takes to see you!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்