விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தகவு உடையவனே என்னும்,*  பின்னும் 
  மிக விரும்பும்*  பிரான் என்னும்,*  எனது
  அக உயிர்க்கு*  அமுதே என்னும்,*  உள்ளம் 
  உக உருகி*  நின்று உள் உளே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

உருகி - நீர்ப்பண்டமாகி
உள்ளுள்ளே நின்று - தன்னில் தான் நின்று
தகவு உடையவனே என்னும் - தயவு குறைவற்றவனே! என்கிறாள்.
பின்னும் - மேலும்
மிக விரும்பும் - மிகவும் குதுர்ஹலங் கொள்ளா நின்றாள்;

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “எனதவளவண்ணர்தகவுகளே” என்று எம்பெருமானுடைய தயவில் குறையிருப்பதாகத் தாய் சொன்ன வார்த்தையைக் கேட்ட மகள் அந்த வார்த்தையைப் பொறாமல் ‘என் கொழுநனுக்குத் தயவில்லையென்று சொல்லலாமோ? கடலில் நீர்வற்றிப் போயிற்று என்பாருமுண்டோ? நம்முடைய பாவமென்று நம்மை நொந்துகொள்ளலாமே யல்லது அவருக்குக் கருணையில்லை யென்று வாய்திறக்கலாமோ? என்று சொன்னாளாக, அதை அநுவதிக்கிறாள் திருத்தாய். தகவு உடையவளே யென்னும் = ஏ என்பதை விளியாகவுங் கொள்ளலாம், (பிரிநிலையாகக் கொண்டு) எவகாரார்த்ர்மாகவுங் கொள்ளலாம். அசோகவனத்திற் பிராட்டி * யாத; ப்ராஜ்ஞ; க்ருதஜ்ஞச் ச ஸாநுக்ரோசச் ச ராகவ;, ஸத்வ்ருத்தோ நிரநுக் ரோச” என்றாள். பெருமாளுக்கு ஒருநாளும் தயவு இல்லாமற் போகாது; என்னுடைய தெளர்ப்பாக்யத்தினால் இங்ஙனம் சங்கிக்க வேண்டிய தாகிறதத்தனை என்றாள். மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் என்றும் மஹத் என்றும் உள்ளது. ‘கிஞ்சித்’ என்றால் சிறிது என்று பொருள்; ‘மஹத்’ என்றால் பெரிது என்று பொருள். பிராட்டிதான் அசோகவனத்திற் கிடந்து துடிப்பதற்கு ஹேது சிறிதாயும் பெரிதாயுமுள்ள இரண்டு துஷ்க்ருதங்கள் என்று அறுதியிட்டாள்.

English Translation

"O Compassionate one!", She calls, then 'Most loving Lord', softly, "My soul's ambrosia", she sighs, then stands and melts into tears.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்