விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  இலங்கை செற்றவனே என்னும்,*  பின்னும் 
  வலம் கொள்*  புள் உயர்த்தாய் என்னும்,*  உள்ளம்
  மலங்க*  வெவ் உயிர்க்கும்,*  கண்ணீர் மிகக் 
  கலங்கிக்*  கைதொழும் நின்று இவளே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

இவள் - இப்பராங்குசநாயகி.
இலங்கை செற்றவனே என்னும் - (என்னோடொத்த ஒருத்திக்காக) லங்காபுரியை யழித்தவனே! என்கிறாள்
பின்னும் - அதற்குமேலும்
வலம் கொள்புற் உயர்த்தாய் என்னும் - வலிமைமிக்க கருடனைக் கொடியாகக் கொண்டவனே! என்கிறாள்.
உள்ளம் மலங்க - மனம் சுழலும்படி

விளக்க உரை

மகளே! பதாறாதே எம்பெருமான்ப்ரணயிநிகளுக்குக் காரியம் செய்வது தவறமாட்டார்; ஜனகராஜன் திருமகளுக்காகத் காரியஞ் செய்தருளினாரென்பது வாஸ்தவமே. அப்பிராட்டி எத்தனை மாதம் தனிச் சிறையிலிருந்து துவண்டாள் தெரியுமோ? பத்துமாதம் பொறுத்தன்றோ அவளுக்கும் காட்சிதந்தது; ப்ராப்திகாலம் வர வேண்டாவோ? அவளுக்குப் போலே உனக்கும் ஒருநாளிலே காட்சி தரத் தடையிராது; *சரைஸ் துஸங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலார்த்தந” மாம்நயேத் யதிகாகுத்ஸ்த; தத் தஸ்ய ஸத்ருசம் பவேத் என்று அப்பிராட்டி ஆறியிருந்தது போலவே நீயும் ஆறியிருப்பதே தகுதி; அவன் இலங்கை செற்றவன் என்பதையே நீ சொல்லிக்கொண்டிரு-என்று நான் (என் மகளைத்) தேற்றினேன்; அவளும் அப்படியே “இலங்கை செற்றவனே!” என்றே சொல்லிக்கொண்டு ஒருவாறு தாரித்திருந்தவள் மீண்டும் கதறத் தொடங்கவிட்டாளென்கிறாள் திருத்தாய்.

English Translation

Her breath is hot, her heart is troubled, with beseeching hands and tears in her she calls "O Destroyer of Lanka" then, "O Rider of the bird!" softly.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்