விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  இரக்க மனத்தோடு*  எரி அணை,* 
  அரக்கும் மெழுகும்*  ஒக்கும் இவள்,*
  இரக்கம் எழீர்*  இதற்கு என் செய்கேன்,* 
  அரக்கன் இலங்கை*  செற்றீருக்கே.   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

இரக்கம் மனத்தோடு - நெகிழ்ச்சியையுடைய நெஞ்சோடு (கூடிய)
இவள் - இப்பெண்பிள்ளை
எரி அணை - நெருப்போடு ஸம்பந்தப்பட்ட
அரக்கும் - (வன்மையான) அரக்கையும்
மெழுகும் - மெழுகையும்

விளக்க உரை

பிரானே! நீர்ஜனகராஜன் திருமகள் திறத்திலே செய்த செயல்களை வால்மீகிபோல்வார்ஸ்ரீராமாயணாதிகளாக எழுதி வைத்தமையாலன்றோ இப்பெண்பிள்ளை துடியாநின்றாள்; ஒரு பிராட்டிக்கு அத்தனை பாடுபட்டுக் காரியஞ் செய்தவர் நம்மை இப்படித் துடிக்கவிட்டிருக்கிறாரே, இது நீதியோ என்று கதறாநின்றாள்- என்கிறாள் திருத்தாய். இன்று இவளை இப்படிக் கைவிட நினைத்த நீர் அன்று உண்ணாதுறங்காது ஒலிகடலை யூடறுத்து அத்தனை செயல்கள் செய்தது ஏதுக்கு என்கிறாள் என்னவுமாம். இரக்கமே வடிவெடுத்தாற்போலிருக்கின்ற நெஞ்சையுடையவிவள் நெருப்போடே சேர்ந்த அரக்கும் மெழுகுபோலே உருகாநின்றாள். இவளுடைய நிலையோ இது; நீரோ இரக்கமென்பது சிறிதுமில்லாம லிருக்கிறீர். உம்மைப்போலே இவளும் இரக்க மற்றவளாக இருக்கும்படி செய்துவிட்டால் இடையில் நான் துடிக்க வேண்டியதில்லை; இவளோ இரக்கமனத்தினள்; நீரோ இரக்கமெழீர்; இதற்கு என்ன செய்வேன்? உம்முடைய இரக்கந்தவிர வேறொன்றால் போக்கக்கூடியதாக இல்லையே இவளுடைய வருத்தம். வேறு எதைச்செய்வேன் நான்? ‘நாம் யாருக்கும் யாதொரு காரியமும் செய்வதில்லை; என்று நீர்சொல்வதற்கும் இடமில்லாதபடி ஒரு பிராட்டிக்காக பாழ்படுத்திவைத்தீரே! பக்ஷபாதச் செயல் செய்யாதே கொள்ளும் என்கிறாள்.

English Translation

She melts for you like wax if a fire, Lord who destroyed Lanka's demon-haunt! You do not let your compassion rise. Alas! What can I do?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்