விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வாள் நுதல்*  இம் மடவரல்,*  உம்மைக் 
  காணும் ஆசையுள்*  நைகின்றாள்,*  விறல்
  வாணன்*  ஆயிரம் தோள் துணித்தீர்,*  உம்மைக் 
  காண*  நீர் இரக்கம் இலீரே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வாள் நுதல் - ஒளிமிக்க நெற்றியையுடைய
இ மடவரல் - (பராங்குசநாயகி யென்னும்) இம்மடத்தை
உம்மை - (அழகிற்சிறந்த) உம்மை
காணும் ஆசையுள் - காணவேணுமென்ற ஆசையிலரகப்பட்டு
நைகின்றாள் - சிதிலையாகின்றாள்;

விளக்க உரை

வாணனுடைய ஆயிரந்தோள்களையுந் துணித்து உi‘க்கும் அநிருத்தாழ்வானுக்கும் அத்தனைகாரியஞ் செய்தருளின நீர்இப்பெண்பிள்ளை திறத்தில் இரங்காதிருப்பது என்னோவென்கிறாள். மீண்டும் வாணுதல் என்றது --- இவளுடைய நெற்றியழகைக் கண்டால் ஒரு நொடிப்பொழுதாகிலும் இவளைவிட்டுப் பாரிந்திருக்கலாம் படியிருக்கிறதோ? பெற்ற தாயான எனக்கே ஆகர்ஷகமாயிருக்கின்ற இவ்வவயவ சோபை உமக்கு அநாதர விஷயமானது எங்ஙனனேயோ என்று சொல்லுகிறபடி. மடவரல் = மடம் என்னும் குணத்தின் வருகையையுடையவனள் என்றபடி, நாண் மடம் அச்சம் பயிர்ப்பு என்ற நான்கு குணங்கள் பெண்டிர்க்கு இன்றிமையாதவை. இவற்றுள் ஒன்றைச் சொல்வது மற்றவற்றிற்கும் உபலக்ஷணமாகும். மடம் என்னும் குணத்தைப் பலபடியாக விவாரிப்பதுண்டு இங்கு, ‘பிரிந்து கலக்கப் பெறாத ஸௌகுமார்யமே மடம்’ என்று ஆசார்யர்களின் திருவுள்ளம். உம்மை என்றது மிகக் கருத்தோடு கூடியது. இவளை நீர்மறந்தாலும் உம்மை நீர்மறக்கலாமோ? உம்முடைய அழகு உமக்குத் தெரியாதோ? நம்மைப் பிரிந்தவர்கள் பிழையார்கள் என்று நீர் அறியமாட்ரோ? என்கை. உம்மைக்காணுமாசையுள் நைகின்றாள் = நீர் இவளைக்காண ஆசைப்படவேண்டியது ப்ராப்தமர்யிருக்க விபாரிதமர்னபடி என்னே! உடைமையக்காண உடையவனன்றோ ஆசைப்படவேண்டும் உடையவனைக் காண உடைமை ஆசைப்படும்படியாயிற்றே! “வாடிவாடும்” என்று சொன்ன நிலை போய் “நைகின்றாள்” என்ன வேண்டும்படியான நிலைமை வந்துவிட்டதுகாண். உம்மைக் காணுமாசையென்னுங் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம்” என்ற திருமங்கையாழ்வார் பாசுரத்தை யுட்கொண்டு நோக்கினால் ஆசை யென்பது ஒரு கடலாகச் சொல்லத்தக்கதாதலால், கடலிலே வீழ்ந்து துடியாநின்றாள் என்பதாகக் கொள்ளலாம்.

English Translation

Desirous of seeing you, this bright maiden faints, Lord who destroyed Bana's arms! Oh, you are heartless indeed.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்