விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஆடி ஆடி*  அகம் கரைந்து,*  இசை 
  பாடிப் பாடிக்*  கண்ணீர் மல்கி,*  எங்கும்
  நாடி நாடி*  நரசிங்கா என்று,* 
  வாடி வாடும்*  இவ் வாள் நுதலே.   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அடியீர் - பக்தர்களே!
குழாம் கொள் - கூட்டங்கூட்டமான சேனைகளைக் கொண்ட
பேர் - மிக்க பெருமை பொருந்திய
அரக்கன் - ராக்ஷஸ ராஜனாகிய இராவணனுடைய
குலம் - குடும்பம்

விளக்க உரை

ப்ரஹ்லாதாழ்வான் அபேக்ஷரித்த ஸமயத்திலே நரசிங்கமாய் வந்து தோன்றி உதவியருளின பெருமான் அந்தோ! எனக்கு உதவுகின்றிலனே யென்று பெண்பிள்ளை வருந்துவதாகத் திருத்தாய் சொல்லுகிறாள். ஆடியாடி யென்றது பெண் பெண்பிள்ளையின் சேஷ்டைகளைச் சொன்னபடி; *எம்மானைச் சொல்லிப்படி. நெஞ்சு நீர்ப்பண்டமாக உருகினபடி சொல்லுகிறது அகங்கரைந்து என்று; அப்படி நெஞ்சு நீர்ப்பண்டமாக உருகா நிற்கச் செய்வதே ஆற்றாமையாலே கூப்பிடுகிற கூப்பீடு அழகியதொரு இசையாகத்தலைக்கட்டி யிருக்கையாலே இசைப்பாடிப்பாடி என்றது. ஆற்றாமையாலே துடித்த துடிப்பு ஆடியாடி எனப்பட்டது; அவ்வாற்றாமையோடேயே கூப்பிட்ட கூப்பிடு இசைபாடிப்பாடி எனப்பட்டது. “அகங்கரைந்து” என்று சொன்னபடி உருகின மனத்தத்துவமானது இசையாய் வழிந்ததுபோக சேஷரித்து நின்ற அம்சம் கண்ணீராய் வழிந்தோடுகையால் கண்ணீர்மல்கி எனப்பட்டது. அசோகவனத்தில் சிம் சுபா வ்ருக்ஷத்தில் நின்றும் கீழே இறங்கிப் பிராட்டியைக் கண்ட திருவடி,*கிமாத்தம் தவநேத்

English Translation

Singing and dancing endlessly, this bright, forehead girl calls, 'Narasimha!", and looks everywhere, Then tears welling, she swoons.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்