விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    களிப்பும் கவர்வும் அற்று*  பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று,* 
    ஒளிக்கொண்ட சோதியுமாய்*  உடன்கூடுவது என்று கொலோ,*
    துளிக்கின்ற வான் இந்நிலம்*  சுடர் ஆழி சங்கு ஏந்தி,* 
    அளிக்கின்ற மாயப் பிரான்*  அடியார்கள் குழாங்களையே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

களிப்பும் - அல்ப ஸந்தோஷமும்
கவர்வும் - மனக்கவலையும்
அற்று - ஒழிந்து
பிறப்பு - ஜன்மதமும்
பிணி - வியாதிகளும்

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “அடியேன் வாய்மடுத்துப் பருகிக் களித்தேன்” என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ‘ஆழ்வீர்! பாரிபூர்ணமான பேறுபெற்று விட்டீரன்றோ? இனியொரு குறையில்லையே; இனியுமக்கு நான் செய்யவேண்டியது ஒன்றுமில்லையே’ என்ன அதற்கு ஆழ்வார், ‘பெருமானே! இவ்விபூதியில் தான் இப்போது ப்ரஹ்மானந்தம் அனுபவிக்கிறேனென்பதில் ஸந்தேஹமில்லை; ஆனாலும் வி‘யாந்தரங்களின் நடுவே என்னை வைத்திருக்கின்றாயாதலால் இவ்வானந்தம் இங்கே நித்தியமாய்ச் செல்லாதாகையாலே ஒரு அப்ராக்ருத தேச விசேஷத்திலே சென்று அங்கு அடியார்களின் கோஷ்டியிலே அந்வயிக்கவேண்டிய தொன்றுண்டு அது எப்போது ப்ராப்தமர்குமோ? என்கிறார்.

English Translation

He is a radiant body of light; the Earth and sky are his. He bears the radiant conch and discus, and protects us all, pleasure, pain and the fourfold vices departing. When, O, when will I join his band of devotees!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்