விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கடி வார் தண் அம் துழாய்க்*  கண்ணன் விண்ணவர் பெருமான்,* 
  படி வானம் இறந்த*  பரமன் பவித்திரன் சீர்,*
  செடி ஆர் நோய்கள் கெட*  படிந்து குடைந்து ஆடி,* 
  அடியேன் வாய்மடுத்துப்*  பருகிக் களித்தேனே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கடி வார் - பாரிமளம் மிக்க
தண் அம்துழாய் - குளிர்ந்தழகிய திருத்துழாய் மாலையையுடையனான
கண்ணன் - ஸ்ரீ க்ருஷ்ணனாய்
விண்ணவர் பெருமான் - நித்யஸிரிகளுக்குத் தலைவனாய்
வானம் - பரமபதத்திலும்

விளக்க உரை

பரமபதத்திலே ப்ராப்தமர்கக்கூடிய பகவத்குணாநுபவத்தை நான் இந்நிலத்திலேயே பெற்றேனென்று களித்துப் பேசுகிறாரிதில். பாரிமளம் மிக்க (அல்லது, தேன் வெள்ளமிடாநின்ற) குளிர்ந்த திருத்துழாய் மாலையை அணிந்துள்ளவனாய், இவ்வலங்காரத்திலே பெரிய திருவடி திருவனந்தாழ்வான் முதலான நித்யஸிரிகளை ஆட்படுத்திக் கொண்டவனாய், அங்குள்ள அந்த நித்யஸிரிகளும் தன் படிக்கு ஒப்பாகப்பெறாதவனாய், மிகவும் அபாரிசுத்தர்களான நம்போலியரையும் பாரிசுத்தர்களாக ஆக்க வல்ல பரமபவித்திரனாய் இராநின்ற எம்பெருமானுடைய திருக்கல்யாணகுணங்களிலே நான் பாரிபூர்ணமாக அவகாஹித்தேன்; அடிகாணவொன்ணாதபடி துர்று மண்டிக்கிடக்கிறஸகல பாவங்களும் தொலையும்படியான பாக்கியமும் பெற்றேன்; ஆக இத்தகைய பரமாநந்தம் பெற்றேனென்றாராயிற்று. கடி---பாரிமளமும் தேனும். வார்தல்---மிகுதியாக இருத்தலும்பெருகுதலுமாம். வானம் படி இறந்த=வானமென்று பரமபதத்திற்கும் மேகத்திற்கும் பெயராதலால், பரம பதத்திலும் தனக்கு ஒப்பில்லாதவன் என்றும் பொருள் கொள்ளலாம்.

English Translation

The peerles Lord of celestials, great and pure, is my Lord, Krishna, who wears the cool nectared Tulasi. Immersing myself deep in the ocean of his goodness. I drank from it and rejoiced, ending my weed-like miseries.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்