விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  குறிக்கொள் ஞானங்களால்*  எனை ஊழி செய் தவமும்,* 
  கிறிக்கொண்டு இப் பிறப்பே* சில நாளில் எய்தினன் யான்,*
  உறிக்கொண்ட வெண்ணெய் பால்*  ஒளித்து உண்ணும் அம்மான் பின்,* 
  நெறிக்கொண்ட நெஞ்சனாய்ப்*  பிறவித் துயர் கடிந்தே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

திருவாய்மொழி-- - திவ்யார்த்ததீபிகை- இரண்டாம்பத்து
உறி கொண்ட - உறிகளிலே சேமித்து வைத்த
வெண்ணெய் - வெண்ணெயையும்
பால் - பாலையும்ஒ
ளித்து உண்ணும் - மறைந்திருந்து அமுது செய்த

விளக்க உரை

நெடுங்காலம் வருந்தி ஸாதிக்கவேண்டிய புருஷர்ர்த்தத்தை இந்த ஜன்மந்தன்னிலே அற்பகாலத்தில் எளிதாகப் பெற்றேனென்று பகவத்கடாக்ஷத்தின் பெருமையைப் பேசுகிறார். வேதநமென்றும் த்யானமென்றும் உபாஸநமென்றும் பக்திக்கு உள்ள அவஸ்தாபேதங்களை ஞானங்களால் என்ற பன்மையால் காட்டுகின்றார். அவை யமம் நியமம் முதலானவற்றி;ல் ஊன்றியிருந்து ஸம்பாதிக்கவேண்டியவையாதலால் குறிக்கொள் எனப்பட்டது. ‘வெகுஜாக்ரத்தையுடன் ஸம்பாதிக்கவேண்டிய’என்று பொருள். எனையூழிசெய்தவமும் ஸ்ரீஇங்குத் தவமென்றது தவத்தின் பலனைச்சொன்னபடி. எத்தனையோ கல்பகாலங்கள் கூடி ச்ரணவம் மநநம் முதலிய செய்கையாகிற தபஸ்ஸின் பலனை ஒரு பெருமுயற்சியின்றியே இப்பிறவியிலேயே சிலநாளிற் பெற்றுவிட்டேன்.

English Translation

What is attained by the penance of many ages through the control of senses. I have attained here in a few days, as mere child's play. Crossing the pain of existence. I have become a lover of the Lord who stole milk and butter from pots on the rope-shelf.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்