விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    முன் நல் யாழ் பயில் நூல்*  நரம்பின் முதிர் சுவையே,* 
    பல் நலார் பயிலும்*  பரனே பவித்திரனே,*
    கன்னலே அமுதே*  கார் முகிலே என் கண்ணா,* 
    நின் அலால் இலேன்காண்*  என்னை நீ குறிக்கொள்ளே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முன் - அநாதியாய்
நல் - விலக்ஷணமாய்
யாழ் பயில் - வீணைணைப் பற்றி
நூல் - ஸங்கீத சாஸ்த்ரத்தின் படியேயான
நரம்பில் - தந்திக்கம்பியிலே வருடப்பட்டு

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “அடியேனடைந்தேன் முதல் முன்னமே” என்றார் அதனால் தம்முடைய நித்ய ஸம்ச்லேஷத்தைத் தெரிவித்துக்கொண்ட ஆழ்வார்இக்கலவிக்கு விச்சேதம் பிறந்தால் என்செய்வது? என்று சங்கித்து, அப்படி ஒருகால் விச்லேஷம் பிறக்குமாகில் தாரிக்கமாட்டேனென்று திருவுள்ளத்திலே கொண்டருள வேணுமென்று இப்பாட்டிலருளிச் செய்கிறார். ‘தாரிக்கமுடியாமைக்குக் காரணம் எம்பெருமானுடைய பரமபோக்யதை முதலானவை’ என்பதைக் காட்டிக்கொண்டு மூன்றடிகளில் பகவத் ஸம்போதநங்களை அமைத்தருளிகிறார். முன்னல்யாழ்பயில்நூல் நரம்பின் முதிர்சுவையே! என்ற விளி-எம்பெருமானுடைய பரமபோக்யதை எல்லாரையும் ஈடுபடுத்துமது என்று காட்டுதற்காக. பசுர்வேத்தி சிசுர்வேத்தி வேத்தி காநரஸம் பணீ என்றபடி பசுக்களையும் சிசுக்களையும் ஸர்ப்பங்களையும் பரவசமாக்கவல்ல ஸங்கீதரஸம் யாதொன்றுமுண்டு, அதுவே எம்பெருமானாக இங்குச் சொன்னது அதுபோல் இவன் ஸகலர்க்கும பரமயோக்யன் என்றபடி. முன் என்பதும் நல் என்பதும் நுர்லுக்கு விசேஷணம். வீணாகாநவிஷயமானசாஸ்த்ரம் அநாதியாயும் விலக்ஷணமாயுமுள்ளது என்றவாறு. அப்படிப்பட்ட சாஸ்த்ரப்படி ஏற்பட்டதாயும், தந்திக்கம்பியிலே கிளர்ந்ததாயுமிருக்கிற முதிர்ந்த கீதரஸம்போலே இனிமையே வடிவெடுத்தவனே! என்றபடி.

English Translation

O Sweet timbre of the well-turned harp-string! O Pure joy attained by the many sages! O sugarcane juice, ambrosia, dark-hued Lord, my Krishna! Without you, I too am not; I pray you take need of me.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்