விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சேர்ந்தார் தீவினைகட்கு*  அரு நஞ்சை திண் மதியை,* 
  தீர்ந்தார் தம் மனத்துப்*  பிரியாது அவர் உயிரைச்,*
  சோர்ந்தே புகல் கொடாச் சுடரை*  அரக்கியை மூக்கு- 
  ஈர்ந்தாயை,*  அடியேன் அடைந்தேன்*  முதல் முன்னமே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

சேர்ந்தார் - பக்தர்களினுடைய
தீ வினைகட்கு - கொடிய பாவங்களுக்கு
அரு நஞ்சை - ஆற்றவாரிதான விஷமாயிருப்பவனும்
திண் மதியை - திடமான அத்யவஸாயத்தை அளித்தருள்பவனும்
நீர்ந்தார்தம் மனத்து பிரியாது - தனக்கே அற்றுத் தீர்ந்தவர்களான பரமை காந்திகளின் மனத்தை விட்டுப் பிரியாமல்

விளக்க உரை

நான் எம்பெருமானைப்பெற்றது இன்றைக்கோ? இவ்வாத்மாவுள்ள போதே பிடித்து எம்பெருமானைப் பெற்றவனல்லேனோ என்கிறார். நெடுநாளாகப் பிரிந்திருந்த பிரிவின் வருத்தம் ஒன்றும் தெரியாதபடி எம்பெருமான் தன்னோடே கலந்ததனாலுண்டான களிப்பு இங்ஙனே பேசுவிக்கின்றது காண்மின். சேர்ந்தார் தீவினைகட்கு அருநஞ்சை=அடியார்களின் பாவங்களை முடிப்பவன் என்றபடி. சாஸ்த்ரங்களில் பாவங்களைப்பற்றி இரண்டு வகையாகச் சொல்லியிருக்கிறது நாபுக்தம் க்ஷரியதே தர்ம கல்பகோடிசதைரபி என்று, பலனை அனுபவித்தே பாவங்களைத் தொலைக்க வேண்டுமென்பது ஒருவகை. ப்ரஹ்மவித்துக்குப் பாப ஸம்பந்தம் அறவேயொழிந்துபோமென்பது மற்றொருவகை. எம்பெருமானை அடிபணியாதவர்கள் முதல்வகைக்கு இலக்கு அடிபணியுமவர்கள் இரண்டாவது வகைக்கு இலக்கு என்பது = பாஸ்யஸித்தாந்தம். இவ்வர்த்தம் விளங்குமாறு இங்கு சேர்ந்தார்தீவினைகட்கு எனப்பட்டது.

English Translation

O, Rare antidote for Karmas! O Medicine for devotion, inseparable from the hearts of seers! O The glow which lights their souls! I have attained the Lord long ago. He cut the nose of Surpanakha.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்