விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  இனி யார் ஞானங்களால்*  எடுக்கல் எழாத எந்தாய்,* 
  கனிவார் வீட்டு இன்பமே*  என் கடல் படா அமுதே,*
  தனியேன் வாழ் முதலே*  பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்,* 
  நுனி ஆர் கோட்டில் வைத்தாய்*  நுன பாதம் சேர்ந்தேனே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

யார் - எப்படிப்பட்டவர்களுடையவும்
ஞானங்களால் - ஞானவிசேஷங்களாலும்
எடுக்கல் எழாத - க்ரஹிக்கப்பார்த்தாலும் க்;ரஹிக்க முடியாத
எந்தாய் - எம்பெருமானே !
கனிவார் - (உன் பக்கலில்) மனங்கனிந்தவர்களுக்கு

விளக்க உரை

பிரளய வெள்ளத்திலே மூழ்கநின்ற ஜகத்தை யெடுத்தருளினாப் போலே ஸம்ஸாரஸாகரத்திலே மூழ்கிக்கிடக்கிற என்னை உன் திருவடிகளில் உறவையறிவித்து எடுத்தருளுகையாலே இனியுன் திருவடிகளைப் பெற்றேனென்று மகிழ்ச்சி தோற்றப் பேசுகிறார். ‘பாசுரத்தின் தொடக்கத்திலுள்ள இனி என்பதற்கு இறுதியுலுள்ள வினை முற்றோடே அந்வயம் இனிச் சேர்ந்தேனேயென்க, ஆர்ஞானங்களால் எடுக்கலெழாத எந்தாய் = எப்படிப்பட்ட சிறந்த ஞானிகளுடைய ஞான விசேஷங்களாலும் தம் முயற்சியாலே அறியப் பார்க்குமிடத்தில் போக்கப் பேராதிருக்கிற என்னாயனே! என்கிறார். இந்த வாக்கியத்தில் உம்மை தொக்கியிருப்பதாகக் கொள்ளவேணும். ஆர்ஞானங்களாலும் என்க. எடுக்கலெழாத என்றவிடத்து, ஞானத்தினால் அறியக் கூடாதவன் என்கிற பொருள் போலவே தூக்கியெடுக்கவும் முடியாதவன்’ என்கிற பொருளும் விவக்ஷரிதம். இது அவதார சரீரத்திரங்களிற் காணத்தகும்.

English Translation

Lord beyond the ken of intellect, Sweet liberation, Ambosia, -untouched by the ocean, -for compassionate souls! You came as a boar and lifted the universe on you tusk teeth.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்