விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஒத்தார் மிக்காரை*  இலையாய மாமாய,* 
  ஒத்தாய் எப் பொருட்கும் உயிர் ஆய்,*  என்னைப் பெற்ற- 
  அத் தாய் ஆய் தந்தை ஆய்*  அறியாதன அறிவித்து,* 
  அத்தா, நீ செய்தன*  அடியேன் அறியேனே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஒத்தார்மிக்காரை -  ஸமான மானவர்களையும் மேற்பட்டவர்களையும்
இலை ஆய - உடையனல்லாத
மா மாயா - பெரிய ஆச்சரீரய குணங்களை யுடைவனே!
எப்பொருட்கும் - எல்லாப்பொருள்களுக்கும்
ஒத்தாய் - ஒப்பாக அவதாரித்தவனே!

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் நெஞ்சைக் கொண்டாடினார் சிறிது ஆராய்ந்து பார்த்தவாறே அந்த நெஞ்சை இசைவித்ததும் ஸர்வேச்வரனே யாதலால் அந்த எம்பெருமானையன்றோ கொண்டாடவேணுமென்று அது செய்கிறாரிப்பாட்டில். எம்பெருமானுடைய காலக்ஷேப கோஷ்டியிலே இப்பாசுரம் வந்தவளவிலே ‘இவ்வாத்மாவுக்கு முதல் குரு யார்? என்று விசாரமுண்டாக ‘ஆசார்யன்’ என்று சிலர் சொன்னார்கள். மற்றுஞ்சிலர் ‘ஆசார்யனுடைய ஸ்ரீபாதத்திலே கொண்டு சேர்த்த ஸ்ரீவைஷ்ணவன் முதல் குரு’ என்கிறார்கள். முடிவாக எம்பார்அருளிச் செய்ததாவது-‘இசைவித்தென்னையுன் தாளிணைக்கிழ் இருத்துமம்மானே என்றருளிச் செய்கையாலே அகவாயிலே இருந்து இசைவித்த ஸர்வேச்வரனே முதல் குரு ஆசார்யன் அழைத்தாலும் ஒரு ஸ்ரீவைஷ்ணவன் அழைத்தாலும் இவன் மாட்டேனென்று சொல்லிவிட்டால் செய்யலாவதில்லை அப்படிச் சொல்லாமல் இசைவித்தது ஸர்வேச்வரனுடைய க்ருத்யமிறே என்பது திருவுள்ளம்.

English Translation

O Great wonder-Lord without a peer or superior! Close to all things and all beings, you are my life, you are my mother, my father, my friend, teaching me all that I do not know. I will never know how much you have done for me.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்