விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஊனில் வாழ் உயிரே*  நல்லை போ உன்னைப் பெற்று,* 
  வான் உளார் பெருமான்*  மதுசூதன் என் அம்மான்,*
  தானும் யானும் எல்லாம்*  தன்னுள்ளே கலந்தொழிந்தோம்,* 
  தேனும் பாலும் நெய்யும்*  கன்னலும் அமுதும் ஒத்தே.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

உயிரே - நெஞ்சமே!
நல்லை போ - நீ நல்லவன் காண்; (ஏனென்றால்)
உன்னை பெற்று - உன்னை ஸ்வாதீனமாகப் பெற்றதனால்,
வான் உளார்பெருமான் - நித்யஸூரிகட்குத் தலைவனும்
மதுசூதன் - மதுவென்னுமசுரனைக் கொன்றவனும்

விளக்க உரை

ஸர்வேச்வரனைக் கொண்டாடப்பிறந்த ஆழ்வார்தம் திருவுள்ளத்தைக் கொண்டாடடுகிறாரிப்பாட்டில். ஏனெனில் கைங்காரியச் செல்வத்திற்கு இட்டுப் பிறந்து வைத்து நெடுநாளாக இழந்துகிடந்த நமக்கு இந்நெஞ்சினாலன்றோ இன்று பேறுவாய்த்தது என்ற உவப்பினால். ராஜ்யத்தை இழந்துகிடந்த வொரு ராஜகுமாரனை ஒருவன் ராஜ்யத்திலே புகுவித்தால் ‘இவனாலேயன்றோ நாம்இப்பேறு பெற்றது’ என்று அவனைக் கொண்டாடுவர்களன்றோ, அதுபோல. ஊனில் வாழ் உயிரே! ‘வாழ்’ என்னுஞ்சொல் ஸந்தோஷத்தோடு கூடின இருப்பையுஞ்சொல்லும் ஸாதாரணமான இருப்பையுஞ்சொல்லும். அவ்விரு வகைப்பொருளும் இங்கு உரைக்கத்தகும். சரீரரத்தில் இருக்கின்ற நெஞ்சே! (அன்றி) தேஹந்தவிர வேறொன்று கிடையாதென்றுகொண்டு அதிலேயே களித்து வர்த்திக்கிற நெஞ்சே! (அன்றியே) பாழும் பிரகிருதியில் இருந்துவைத்தே பகவத் குணங்களையே தாரகமாகக்கொண்டு வாழ்கிற நெஞ்சே!

English Translation

Good for you, O Life residing in the body! Through your grace my Lord Madhusadana and I have mingled into one inseparably, as sweetly as milk and honey, sugarcane juice and Ghee .

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்