விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஏத்த ஏழ் உலகும் கொண்ட*  கோலக் 
    கூத்தனைக்,*  குருகூர்ச் சடகோபன் சொல்,*
    வாய்த்த ஆயிரத்துள்*  இவை பத்துடன்,* 
    ஏத்த வல்லவர்க்கு*  இல்லை ஓர் ஊனமே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஏத்த - (அனைவரும் துதிக்க
ஏழ் உலகும் கொண்ட - எல்லா வுலகங்களையுமளந்துகொண்ட
கோலம் கூத்தனை - அழகிய கூத்தனான எம்பெருமானைக்குறித்து
குருகூர்சடகோபன் சொல் - ஆழ்வார் அருளிச்செய்த
வாய்த்த - உலகுக்கு மஹாபாக்யமாகக் கிடைத்த

விளக்க உரை

இத்திருவாய்மொழியைக் கருத்துடனே கற்றுவல்லார்க்கு, எம்பெருமான் ஈச்வரனல்லன்’ என்று புத்திபண்ணுதல். ‘இதரதேவதைகள் ஈச்வரர்கள்’ என்று புத்தி பண்ணதல் ஆகிற அவத்யமொன்றும் உண்டாகமாட்டாதென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். எம்பெருமானுடைய பரத்வத்தை நிரூபிக்கக் கீழே பாசுரந்தோறும் பிரதிபாதிக்கப்பட்ட விஷயங்களுள் உலகமளந்த சரீரதையொன்றே போதுமம என்பது தோன்ற நிகமத்தில் அதனை யெடுத்துக் காட்டுகின்றார். ஸ்ரீ விஷ்ணுதர்மத்தில் மாங்கல்ய ஸ்வத்தில் -- ஸங்கைஸ்ஸூராணாம் திவிபூதலஸ்தை; ததா மநுஷ்டியர் ககநே ச கேசரை ஸ்துத: க்ரமா ந் ய: ப்ரசகார ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹாரி; என்றதைத் திருவுள்ளம்பற்றி ஏத்தவெழுலகுங்கொண்ட என்றார். வாய்த்தவாயிரம் பாரத்பரனான எம்பெருமான் நமக்கு வாய்த்தது ஒரு அதிசயமன்று அவனது பெருமைகளை வாயாரப்பேச இத்திவ்யப்ரபந்தம் வாய்த்ததுதான் மிக்க அதிசயம் என்று ஆழ்வார் தமக்கே ஆச்சரீரயமாயிருக்கிறபடி.

English Translation

This decad of the thousand songs, In praise of the dancer Lord who took the Earth, appears in the words of Kurugur Satakpan, Those who recite it with devotion shall have no want.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்