விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பேசவும் தரியாத பெண்மையின்*  பேதையேன் பேதை இவள்* 
    கூசமின்றி நின்றார்கள்*  தம் எதிர் கோல் கழிந்தான் மூழையாய்* 
    கேசவா என்றும் கேடிலீ என்றும்*  கிஞ்சுக வாய் மொழியாள்* 
    வாச வார்குழல் மங்கைமீர்!*  இவள் மால் உறுகின்றாளே.*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வாசம் வார் - வாஸனையையும் நீட்சியையுமுடைய;
குழல் - கூந்தலையுடைய;
மங்கைமீர் - பெண்காள்;
பேதையேன - பேதைமையையுடைளான என்னுடைய;
பேதை - பெண் பிள்ளையும்;

விளக்க உரை

உரை:1

“பேசவுந் தெரியாத“ என்பது – அச்சுப்பிரதிகளிற் பாடம் அது – வியாக்கியானப் போக்குக்குப் பொருந்தாதென மறுக்கப்பட்டது. “ஒருவார்த்தை சொல்லப் பொறாத ஸ்த்ரீத்வத்தையுடைய, அதாவது – தன்னுடைய ஆசாரத்தால் ஸ்த்ரீத்வத்துக்கு ஒரு நழுவுதல்வாராதபடி வர்த்திக்கு மளவன்றிக்கே, நழுவுதலுண்டாக ஒருவர் ஒருவார்த்தை சொல்லிலும் அது பொறாமல் மாந்தும்படியான ஸ்த்ரீத்வத்தை யுடையவளென்கை, ஸ்த்ரீவமாவது – நாண், மடம், அச்சம், பயிர்ப்பு என்கிற ஆத்மகுணயோகம்“ என்றிறே மணவாளமாமுனிகள் உரைத்தருளிற்று. தெரியாத என்ற பாடத்திலும் அக்கருத்தை ஏறிட்டுரைக்க்க் கூடுமென்பர் சிலர், அது அஸாத்யமெனத்தெளிக, தரியாத என்பதே ஆன்றோர் பாடம், யரியாத என்றபடி. மற்றையடிகளின் கருத்தும் இப்பாடத்துக்கே போரப்பொருந்துமென்க.

உரை:2

நீண்ட வாசகங்களைப் பேசவே இன்னும் கற்காதவள் இவள். பேதையேன் நான் பெற்ற பேதைப் பெண். ஆனால் எந்தவிதக் கூச்சமும் இன்றி எல்லார் எதிரிலும் மாதவன் பெயர்களைப் பிதற்றித் திரிகிறாள் என் கிளிபோன்ற மொழியுடையாள். வாசம் மிகுந்த குழல் உடைய மங்கையர்களே. என் மகள் இப்படி மயங்கி நிற்கின்றாளே.

English Translation

O Fragrant Coiffured Ladies! My fond daughter with ill-formed feminine speech drools like a parrot. In front of everybody, shamelessly -- like a ladle slipped from its handle -- she cries,” O Kesava, O Faultless One”. Alas, she is infatuated.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்