விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கருத்தில் தேவும்*  எல்லாப் பொருளும்,* 
  வருத்தித்த*  மாயப் பிரான் அன்றி,*  யாரே
  திருத்தித்*  திண் நிலை மூவுலகும்*  தம்முள் 
  இருத்திக்*  காக்கும் இயல்வினரே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கருத்தின் - தனது ஸங்கல்பத்தினாலே
தேவும் - தேவர்களையும்
எல்லாப் பொருளும் - மற்றெல்லாப் பொருள்களையும்
வருத்தித்த - வ்ருத்தி செய்த (உண்டாக்கின)
மாயம் -ஆச்சரீரயமான சக்தி முதலியவற்றையுடைய

விளக்க உரை

- ஸ்ருஷ்டி கார்யத்தையும் ஸம்ரக்ஷண கார்யத்தையும் ஸ்வாதீநமாகவுடையவனாகையாலே இவனுக்கே ஈச்வரத்வம் பொருந்துமென்கிறார். தனது ஸங்கல்பத்திலே தேவஜாதி முதலான ஸகல பதார்த்தங்களையும் உண்டாக்கின ஆச்சர்ய பூதனான ஸர்வேச்வரனையன்றி மூன்று லோகங்களையும் நிலைபெறுமாறு திருத்தித் தன் ஸங்கல்பத்திலே வைத்துக்கொண்டு காக்கும் ஸ்வபாவமுடையவர் வேறு யாரேனுமுளரோ? இல்லையென்றபடி. இதனால், ‘ஸ்ருஷ்டிக்குப் பிரமன் கடவன், ரக்ஷணத்திற்கு மாத்திரமே எம்பெருமான் கடவன் என்பது கிடையாது; எல்லாம் எம்பெருமானதீனமே’ என்றதாம்.

English Translation

By his will, he made the gods and all things, He contains the three worlds and protects them, and lends them his permanence. Who but our wonder-Lord can do this?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்