விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பள்ளி ஆல் இலை*  ஏழ் உலகும் கொள்ளும்,* 
  வள்ளல்*  வல் வயிற்றுப் பெருமான்,*
  உள் உள் ஆர் அறிவார்*  அவன் தன்,* 
  கள்ள மாய*  மனக்கருத்தே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பள்ளி - படுக்கை
ஆல் இலை - ஆலந்தளிராக
ஏழ் உலகும் - ஏழுலகங்களையும்
கொள்ளும் - கொள்ளக்கடவதான
வல் - உறுதியான

விளக்க உரை

ஸகல லோகங்களுக்கும் ஆபத்திலே இடங்கொடுக்கையாகிற சிறந்த ஔதார்யத்தையடையனாய், ஸகல லோகத்தையம் திருவயிற்றிலே வைத்துக் கொண்டு ஒரு சிறிய ஆலந்தளிரிலே கண்வளர்ந்தருளும்படியான அகடிதகடநா ஸாமாத்தியத்தையுடையனான ஸர்வேச்வரனுடைய திவ்ய சேஷ்டிதங்களை ஆர்அறிய வல்லார்? என்னும் முகத்தாலே, இப்படிப்பட்ட அகடிதகடநா ஸமர்த்தனுக்கே ஸர்வேச்வரத்வம் தகும் என்கிறாராயிற்று.

English Translation

My Lord has a great strong belly. He ate the seven worlds and slept on a fig leaf. We can understand the mysteries of his dark unfathomable will?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்