விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  எவரும் யாவையும்*  எல்லாப் பொருளும்,* 
  கவர்வு இன்றித்*  தன்னுள் ஒடுங்க நின்ற,*
  பவர் கொள் ஞான*  வெள்ளச் சுடர் மூர்த்தி,* 
  அவர் எம் ஆழி*  அம் பள்ளியாரே,  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

எல்லாப் பொருளும் - ஆகிய எல்லாப் பொருள்களும்
கவர்வு இன்றி - நெருக்கமின்றியே
தன்னுள் - தனது திருவயிற்றினுள்ளே
ஒடுங்க நின்ற - அடங்கும்படி நின்றவனும்
பவர் கொள் - பரப்பைப்கொண்ட

விளக்க உரை

சேதநாசேநாத்மகமான ஸகல பதார்த்தங்களையும் தன் திருவயிற்ளிலே வைத்து ரக்ஷரிக்கையாலே அவனே ஈச்சரனென்கிறார். யவரும் என்று உயர்திணையாகச் சொல்லுகையாலே சேதநப் பொருள்களடங்கிலும் அர்த்தம். ‘யாவையும் என்று அஃறிணையாகச் சொல்லுகையாலே அசேதநப்பொருள்களடங்கலும் அர்த்தம். மீண்டும் ‘எல்லாப்பொருளும்’ என்றது பிரளயகாலத்தில் திருவயிற்றினுட புகாது நின்ற பொருள் அணுவளவும் இல்லையென்பதைத் திடமாகவுடைத்தற்கரம். கவர்வு இன்றி = பரஸ்பரம் ஹிம்ஸை ஏற்படாதபடி என்றவாறு ஒருவரையொருவர் நெருக்காதபடி விசாரமாகத் திருவயிறு இடங்கொடுத்ததென்க. “தன்னுள் ஒடுங்கநின்று” என்பதற்கு இரண்டுவகையாகப் பொருள் கொள்வர்; திருவயிற்றினுள்ளே என்பது ஒரு பொருள். தன் ஸங்கல்பத்திலே என்பது மற்றொரு பொருள். ஸகல சராசரங்களும் எம்பெருமானுடைய ஸங்கல்பத்திலே ஒடுங்கி நிற்கின்றன வென்றபடி.

English Translation

All things, all beings and all the worlds, -he contains them within him easily. He is an icon of eternal effulgence reclining in the ocean, He alone in my Lord!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்