விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தகும் சீர்த்*  தன் தனி முதலினுள்ளே,* 
  மிகும் தேவும்*  எப் பொருளும் படைக்கத்,*
  தகும் கோலத்*  தாமரைக் கண்ணன் எம்மான்,* 
  மிகும் சோதி*  மேல் அறிவார் எவரே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

சீர் - (சிறந்த ஞானம் முதலிய ) குணங்களையுடையனான
தன் - தன்னுடைய
தனி - ஒப்பற்ற
முதலினுள்ளே - உலககாரணமான ஸங்கல்பத்திற்குள்ளே
மிகும் - மிகுந்த

விளக்க உரை

எம்பெருமானுக்குப் பரத்வஸ்தாபங்களானவற்றுக்குள்ளே புண்டாரிகாக்ஷத்வமும் ஒன்றாதலால் அதனை இங்கு அருளிச்செய்கிறார். ஆளவந்தாரும் ஸ்கோத்ரரத்நத்தில் ஸ்ரீமந்நாராயணனுடைய பரத்வத்தை நிரூபிக்கும் பிரகரணத்திலே க புண்டாரிகநயந: புருஷோத்தம: க: * என்றருளிச் செய்தது காண்க. தனக்குத் தகுதியான ஜ்ஞாநசக்தி முதலிய திருக்குணங்களை யுடையனாய்த் தன்னுடைய ஸங்கல்ப மாத்திரத்தினாலே எப்படிப்பட்ட தேவர்களையும் படைக்க இவனே தகதியுடையானென்று கோட்சொல்லித் தருகின்ற தண்டாமரைக் கண்களையுடையனாய் அவ்வழகாலே என்னை; அடிமை கொண்டருளின எம்பெருமானே பரதத்துவம் இவன் தவிர வேறு சில ஈச்வரர்கள் உண்டென்பதற்கு ப்ரமாணமில்லை என்றாராயிற்று.

English Translation

My Lord of befitting wealth and lotus eyes by his own cause did create the exalted gods and all things and beings. Who can praise a Lord of greater glory?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்