விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஏ பாவம் பரமே*  ஏழ் உலகும்,* 
    ஈ பாவம் செய்து*  அருளால் அளிப்பார் ஆர்,*
    மா பாவம் விட*  அரற்குப் பிச்சை பெய்,* 
    கோபால கோளரி* ஏறு அன்றியே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மா பாவம் விட - மிகப் பெரிதான (பிரமஹந்தி) பாபமானது விட்டு நீங்கும்படி
அரற்கு -  சிவபிரானுக்கு
பிச்சை பெய் - பிக்ஷையிட்ட
கோபாலன் - கோபாலனென்கிற
கோள் அரி ஏறு அன்றி - வலிமை தங்கிய ஆண்சிங்கமல்லது

விளக்க உரை

“நங்கண்ணன் கண்ணல்லதில்லையோர்கண்ணே”--- என்றருளிச் செய்த ஆழ்வாரை நோக்கிச்சிலர் ’இப்படிச் சொல்லலாமோ.? பிரமன் சிவன் முதலானாரும் ஈச்வரர்கள் என்று காட்டுகின்ற பிரமாணங்கள் இல்லையோ? என்ன; அவர்களது சரித்திரங்களை ஆராய்ந்துபார்த்தால் அவர்கள் ஈச்வரர்களாகத் தகுதியில்லை; ஆபத்து வந்த காலத்திலே அவர்களைக் காத்தருளினவனாக ப்ரஸித்தி பெற்ற எம்பெருமானே ஈச்வரன் என்று நிலைநாட்டுகிறாரிதில். *வேதாபஹார குருபாதக * இத்யாதி ஸ்தோத்ர ரத்த ஸ்ரீஸிக்திக்கு இப்பாசுரம் மூலம். தொடங்கும்போதே ஏ பாவம்! என்றது ஆழ்வாருடைய மிக்க துக்கத்தைக் காட்டும். மாணிக்கத்திற்கும் களிமண்ணுக்குமுள்ள வாசியை ஒருவன் எடுத்துரைக்க வேண்டுமோ? அவரவர்களே அநாயாஸமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயத்தையும் நான் எடுத்துக்கூற வேண்டும்படியாவதே! என்று வருத்தங்காட்டுகிறபடி. பர என்ற வடசொல் பரமெனத் திரிந்தது. எம்பெருமானை அநுபவிப்பதற்கென்று பிறந்த எனக்கு மூடர்களைத்தேற்ற வேண்டுவதும் ஒரு சுமையாக வந்து நிற்கின்றதே! என்ற வருத்தத்தைப் பரமே! என்றதனால் காட்டுகிறபடி “பகவத்குணாநுபவம் பண்ணுகையொழிய இது நமக்கு பரமாவதே!” என்பது ஈடு.

English Translation

The great lion of the cowherd clan, he ended the woes of Siva who came pleading, Who else can rid the misery of the seven worlds, and protect them too? Alas, must I answer this?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்