விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வேவு ஆரா வேட்கை நோய்*  மெல் ஆவி உள் உலர்த்த,* 
  ஓவாது இராப்பகல்*  உன்பாலே வீழ்த்து ஒழிந்தாய்,*
  மா வாய் பிளந்து*  மருதிடை போய் மண் அளந்த,* 
  மூவா முதல்வா*  இனி எம்மைச் சோரேலே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மண் அளந்த - (த்ரிவிக்ரமனாய்ப்) பூமியை அளந்து கொண்டவனுமான
மூவா முதல்வா - அழியாமுதல்வனே!
வேவு ஆரா - எவ்வளவு வேவச் செய்தும் த்ருப்தியடையாத
வேட்கை நோய் - ஆசை நோயானது
மெல் ஆவி - மெல்லிய ஆம்மாவை

விளக்க உரை

இப்படி அளவுகடந்த ஆர்த்தியோடே துடிக்கிற ஆழ்வாரைக் குளிர நோக்கி ஒருவாறு சுகப்படுத்த வந்து நெருங்கிய எம்பெருமானைக் குறித்து, பிரானே! சிலநாள் நலிந்து விடுவதன்றியே மேன்மேலும் மிகவும் நலிகின்ற விரஹவ்யஸநமானது ஏற்கனவே மெலிந்துபோன ஆத்மாவை மிகவுதட நோவு படுத்த இரவும்பகலும் இடைவிடாதே உன்னுடைய குணசேஷ்டிதங்களையே நினைந்து நிநைந்து உள்கரைந்து உருகும்படியாகச் செய்திட்டாய்; இவ்வளவு செய்த நீ இனி ஒருகாலமும் என்னைக் கைவிடாதே கொள்ளவேணும் என்று பிரார்த்திப்பதாய்ச் சொல்லுகிறது இப்பாசுரம்.

English Translation

O Youthful Lord! You ripped the horse's jaws, pierced many trees and measured the Earth! With the raging fire of love-sickness, incessantly, You have scorched my frail soul within, by day and by night, and made me drop at your feet, I pray you, evade me no more!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்