விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பட்டம் கட்டிப் பொற்றோடு பெய்து*  இவள் பாடகமும் சிலம்பும்* 
  இட்ட மாக வளர்த்து எடுத்தேனுக்கு*  என்னோடு இருக்கலுறாள்*
  பொட்டப் போய்ப் புறப்பட்டு நின்று*  இவள் பூவைப் பூவண்ணா என்னும்* 
  வட்ட வார் குழல் மங்கைமீர்!*  இவள் மால் உறுகின்றாளே.*

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வட்டம் வார் - சுருட்சியையும் நீட்சியையும் உடைய;
குழல் - கூந்தலையுடைய;
மங்கைமீர் - மாதர்காள்!,;
பட்டம் கட்டி - (நெற்றிக்கு அணியான)பட்டத்தைக் கட்டியும்;
பொன் தோடு - (காதுக்கு அணியான) பொன்தோட்டையும்;

விளக்க உரை

உலகத்திற் பெண்கள் விசேஷமாக ஆபரணங்களைப் பண்ணிப் பூட்டுகின்ற தாய்மாரை விரும்பிக் கலந்து பிரியாதிருத்தல் வழக்கமாயிருக்க, என் பெண் ஒருத்தி மாத்திரம் இறைப்பொழுதும் என்னோடிருக்க ஸம்மதியாமல் தெருத் தெருவாகத் திரிந்து எம்பெருமானது அடையாளங்களைச் சொல்லியழைத்து மயங்குகின்றாளே யென்று சில பெண்களை நோக்கிக் கூறுகின்றாள். [மங்கைமீர்!] இப்படி தாய்ச் சிறகின் கீழடங்காப் பெண்ணைப் பெறாத பூர்த்தி உண்டன்றோ உங்களுக்கு! என்ற கருத்துத் தோன்றும்; உங்களது பெண்களின்படியும் இவ்வாறு தானோ? என்று வினவியவாறுமாம்; “பொருலற்றாளென்மகள் உம்பொன்னுமஃதே?” (திருநெடுந்தாண்டகம்) என்றது காண்க. பாடகம் – பாதகடகம் என்ற வடசொற்சிதைவு. சிலம்பு- நூபுரம். இட்டம்-இஷ்டம். வளர்த்தெடுத்தேனுக்கு என்னோடு – வளர்த்தெடுத்த என்னோடு என்றபடி. (பூவைப்பூ வண்ணாவென்னும்) பந்துக்கள் செய்வித்த விவாஹமாகில் “???” என்று புரோஹிதர் சொல்லும்போது பர்த்தாவின் பெரையறியலாம் இயற்கைப் புணர்ச்சியாகையாலே றிமரியுமித்தனை. ஸ்வாபதேசத்தில், பட்டம் பாடகம் முதலிய ஆபரணங்களாவன---- “???” என்றபடி – முதன்முதலாக இவ்வாத்துமாவை அங்கீகரித்த்த ஆசிரியன் உண்டாக்குகின்ற நாமரூபங்களும், பகவத் ப்ரணாமாதிகளும், பின்புஆசார்ய வைபவத்தை உணர்த்தி அவனுக்குண்டாக்குஙம் “???” வஜ்ஞாநாதிகளுமாகிற ஆத்மாலங்காரங்கள். ஆழ்வார் நமக்கு இவ்வகை ஆத்மாலங்காரங்களை உண்டாக்கின ஆசார்யர்களிடத்துள்ள நிஷ்டை மாத்திரத்தால் பாயாப்திபெறாமல், எம்பெருமானெழுந்தருளியிருக்குமிடமான பல்திருப்பதிகளிற் சென்று ஆழ்ந்திடுதலைக் கூறுதல், இதற்கு உள்ளுறைபொருள்.

English Translation

O Curly haired Ladies! I gave her everything she wanted,--forehead pendant, gold earrings, anklets and ankle-bells,--and brought her up fondly. She does not stay with me anymore. She suddenly started off, calling “O Kaya-hued Lord!” and left me. Alas, she is infatuated.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்