விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இருளின் திணி வண்ணம்*  மாநீர்க்கழியே போய்,* 
    மருளுற்று இராப்பகல்*  துஞ்சிலும் நீ துஞ்சாயால்,*
    உருளும் சகடம்*  உதைத்த பெருமானார்,* 
    அருளின் பெரு நசையால்*  ஆழாந்து நொந்தாயே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இருளின் - இருட்டினுடைய
திணி - செறிந்த
வண்ணம் - நிறத்தையுடைய
மா - பெரிய
நீர்சுழியே - நீருள்ள சுழியே!

விளக்க உரை

இருளின் செறிவாலே நீருக்கும் தரைக்கும் வாசயிறயாதேஒரு கழியிலே சென்றிழிந்தாள்; கழிதான் இரைத்துக்கொண்டு ஓடாநிற்குமாகையாலே அது தன்னைப்போலவே பகவத் விஷயத்திலீடுபாட்டாலே உறக்கமற்றுக் கதறுகின்றதாகக் கொண்டு ஐயோ! சகடாஸூரபங்கம் பண்ணின பெருமானுi.டய செயலிலே நீயும் அகப்பட்டாயோ வென்கிறாள்

English Translation

O salty stream, flowing like molten darkness! Even if night and day find their ends, you do not rest. Are you too forlorn through the pain of separation? Did you seek the grace of the Lord who smote the cart?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்