விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தோற்றோம் மட நெஞ்சம்*  எம் பெருமான் நாரணற்கு*  எம் 
  ஆற்றாமை சொல்லி*  அழுவோமை நீநடுவே,*
  வேற்றோர் வகையில்*  கொடிதாய் எனை ஊழி,* 
  மாற்றாண்மை நிற்றியோ*  வாழி கனை இருளே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கனம் இருளே - கனத்திருக்கின்ற இருளே !
எம்பெருமான் - எமக்கு ஸ்வாமியான
நாரணற்கு - நாராயணனுக்கு
மடம் நெஞ்சம் தோற்றோம் - விதேயமான நெஞ்சைப் பறிகொடுத்தோமாகி
எம் ஆற்றாமை சொல்லி அழுவோமை - எங்கள் ஆற்றாமையை வாய்விட்டுச் சொல்லி

விளக்க உரை

ஒருவரையொருவர் காணவொண்ணாதபடி மூடின இருளைக்குறித்து ‘இருளே. எம்பெருமானைப் பிரிந்து நோவுபட்டிருக்கிறவென்னை நீயும் இப்படி ஹிம்ஸிப்பாயோ? என்று பொடிந்து பேசுகின்றாள். முதற்பாட்டிற் சொன்ன நாரையென்ன, இரண்டாம் பாட்டிற் சொன்ன அன்றிற் பறவையென்ன, ஐந்தாம் பாட்டிற் சொன்ன கடலென்ன, நான்காம் பாட்டிற் சொன்ன வாடையென்ன, மூன்றாம் பாட்டிற் சொன்ன வானமென்ன, கீழ்ப்பாட்டிற் சொன்ன இளம்பிறைச் சந்திரனென்ன ஆகிய இவையெல்லாம் தம்மோடு துல்ய கயோகக்ஷேமங்களா யிருக்கின்றனவென்று கருதிய ஆழ்வார் அவற்றையெல்லாங் கூட்டிக்கொண்டு இங்ஙணம் சேதனப் பொருள்களோடு அசேதனப் பொருள்களோடு வாசியற நாங்களெல்லோரும் பகவத் விஷயத்திலீடுபட்டு நெஞ்சிழந்து எங்கள் ஆற்றாமையைச் சொல்லிக் கதறியழுதுகொண்டிருக்க, இருளே ! நீயும் எங்களைப்போலே (எங்கள் திரளிலே சேர்ந்து) கதறியழவேண்டியிருக்க. அது செய்யாதது மல்லாமல் பகைவரைக் காட்டிலுங் கொடிதாக நின்று எங்களை நீ ஹிம்ஸிக்கின்றாயே! இப்படியும் ஒரு கொடுமையுண்டோ? நீ இக்கொடுமை நீங்கி வாழ்க என்கிறாள்.

English Translation

O Engulfing darkness! Having lost my frail heart to my Lord, I weep and lament my unbearable lot. Alas, you are more cruel than my worst enemy; how long will you confront me? May you win!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்