விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஊழிதோறு ஊழி*  உலகுக்கு நீர்கொண்டு,* 
  தோழியரும் யாமும் போல்*  நீராய் நெகிழ்கின்ற,*
  வாழிய வானமே*  நீயும் மதுசூதன்,* 
  பாழிமையில் பட்டு அவன்கண்*  பாசத்தால் நைவாயே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

உலகுக்கு நீர்கொண்டு  - உலகுக்கெல்லாம் ஆகும்படி நீரை முகந்து கொண்டு
ஊழி ஊழி தோறு - காலமுள்ளவளவும்
நீர்ஆய் - நீர்வடிவமாய்
நெகிழ்கின்ற - விழுகின்ற
வானமே - மேகமே !

விளக்க உரை

நீராய் இற்று விழுகின்ற மேகத்தைக்கண்டு, நீயும் என்னைப்போலே எம்பெருமானுடைய குணசேஷ்டிதம் முதலியவற்றில் அகப்பட்டு நோவுபடுகிறாய் போலுமென்று சோகித்துச் சொல்லுகிற பாசுரம் இது. மேகம் நீர்சொரிவதைக் கண்ணீர்விட்டு அழுகிறபடியாக வெண்ணிச் சொல்லுகிறாள். “உலகுக்கு நீர்கொண்டு” என்பதற்குச் சிலர் பொருள் ப்ரமிப்பார்கள்--“உலகுக்கெல்லாம் உதவுகைக்காக நீரைக்கொண்டு என்று பொருள் எண்ணுவார்கள்; அந்தப்பொருள் பிரகரணத்திற்குச் சேராது; உலகமெல்லாம் வெள்ளமிடவேண்டும்படியான நீரைச்சொரிந்து கொண்டு’ என்றே பொருள் கொள்ளவேணும் இங்ஙனமே பூருவாசார்யர்களெல்லாரும் வியாக்கி யானித்தருளினர். உலகுக்கு உதவுவதகற்காக நீரை யெடுத்துக் கொண்டென்றால் இது மேகத்தின் இயற்கையாதலால் ஆழ்வார் அவ்வியற்கையைத் தாம் அறிந்துகொண்டாரென்று சொல்லிவிட்டால் “நீயும் மதுசூதன் பாழிமையிற்பட்டு அவன்கண் பாசத்தால் நைவாயே” என்கிற வார்த்தைக்கு ப்ரஸக்தியே இல்லையாய்விடுமென்க.

English Translation

O Blessed clouds, bringing water to the world! Age after age, like me and my sisters, you melt, were you too caught in the Lord Madhusudana's vice and made to suffer the pangs of love?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்