விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வாயும் திரை உகளும்*  கானல் மடநாராய்,* 
  ஆயும் அமர் உலகும்*  துஞ்சிலும் நீ துஞ்சாயால்,* 
  நோயும் பயலைமையும்*  மீது ஊர எம்மேபோல்,* 
  நீயும் திருமாலால்* நெஞ்சம் கோள்பட்டாயே?.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மடம் நாராய் - இளமை தங்கிய நாரையே!,
ஆயம் அமர்  உலகும் துஞ்சிலும் - (நமது) தாயும் தேவலோகமும் உறங்கினாலும்
நீ துஞ்சாய் - நீ உறங்குகிறாயில்லை;
ஆல் - ஆதலால்
நோயும் பயலைமையும் மீதூர - மனவருத்தமும் (அதன் காரியமான) பசலை நிறமும் மேலிட்டுவர

விளக்க உரை

பிரிந்தவர்கள் இரங்குவது நெய்தல் நிலத்திலாதலால் ஆழ்வார்இப்போது கடற்கரைச் சோலையிலிருப்பதாகக் கொள்க. ஆங்கு உணவுக்காக ஊக்கங்கொண்டிருக்கின்ற ஒரு நாரை கண்ணுக்குப் புலப்பட, அதனுடம்பில் இயற்கையாகவுள்ள வெண்மையைக்கண்டு அதுவும் தம்மைப்போலவே பிரிவாற்றாமையினால் விவர்ணப் பட்டிருக்கின்றதாகக்கொண்டு நாராய்! ஐயோ! நீயும் நானகப்பட்ட விஷயத்திலே அகப்பட்டு இப்படியானாயோ? என்பதாகச் செல்லுகிறது இப்பாசுரம். வாயுந் திரை உகளும்--இதை நாரைக்கு விசேஷணமாகக் கொள்வாருமுளர் , கானலுக்கு விசேஷணமாகக் கொள்வாருமுளர். மேன்மேலும் எறிகின்ற அலையிலே அமுக்கி நடக்கின்ற நாரையே ! என்னவுமாம் திரைகள் உகளப்பெற்ற கானலிலே (கழியிலே) வர்த்திக்கின்ற நாரையே! என்னவுமாம்.

English Translation

O white egret, flapping over brackish waters! Even if my mother and the godly world sleep, you do not go to sleep, Are you tool, like me, forsaken by the Lord, -spouse of Lakshmi, -and left to pale and sicken?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்