விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  இருங்கை மதகளிறு*  ஈர்க்கின்றவனைப்* 
  பருங்கிப் பறித்துக்கொண்டு*  ஓடும் பரமன்தன்* 
  நெருங்கு பவளமும்*  நேர்நாணும் முத்தும்* 
  மருங்கும் இருந்தவா காணீரே* 
        வாணுதலீர் வந்து காணீரே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

இரு கை மத களிறு - பெரிய துதிக்கையையுடைய மத்தகஜமான குவலயாபீடத்தை;
ஈர்க்கின்றவனை - தன்வசமாக நடத்தா நின்றுள்ள பாகனை;
பருங்கி - கொன்று;
பறித்துக்கொண்டு - (யானையின் கொம்புகளை) முறித்துக் கொண்டு;
ஓடு - (கம்ஸனிருக்குமிடத்தைத் தேடிக்கொண்டு) ஓடின;
பரமன் தன் - பரமபுருஷனான கண்ணனுடைய

விளக்க உரை

உரை:1

நீண்ட துதிக்கையினை உடைய மதயானையான குவலயாபீடத்தைக் கண்ணனைக் கொல்லும் நோக்கத்துடன் செலுத்திக் கொண்டு வந்த யானைப்பாகனைக் கொன்று யானையின் தந்தங்களை முறித்துக் கொண்டு ஓடிய பரமனான கண்ணனின் இடையில் விளங்கும் நெருங்கிய பவள வடத்தையும் சிறந்த அரைநாணையும் முத்து வடத்தையும் பாருங்கள்; ஒளி மிகுந்த நெற்றியை உடைய பெண்களே பாருங்கள்.

உரை:2

இடையினழகையும் அதிலுள்ள ஆபரணங்களினழகையும் காட்டும் பாசுரம் இது. ஸ்ரீக்ருஷ்ணனைக் கொல்லக் கருதிய கம்ஸன் வில்விழாவென்கிற வியாஜம் வைத்துக் கண்ணனை அழைக்க, அப்பிரானும் பலராமனுடனே புறப்பட்டு வந்து கம்ஸன் அரண்மனையினுட் புகும்போது, இவர்களைக் கொல்லும்படி கம்ஸனால் ஏவி நிறுத்தப்பட்டிருந்த குவலயா பீடமென்னும் மதயானை சீறிவர, ஸ்ரீக்ருஷ்ண பலராமர்கள் அவ்யானையை எதிர்த்து அதன் தந்தங்களிரண்டையும் சேற்றிலிருந்து கொடியைப் பறித்தெடுப்பதுபோல எளிதிற் பிடுங்கியெடுத்து அவற்றையே ஆயுதமாகக் கொண்டு அவற்றால் பாகனையும் அவ்யானையையும் கொன்றனரென்ற வரலாறு முன்னடிகளில் அடங்கியுள்ளது. அன்றியே, ஊரில் இடைப்பிள்ளைகள் தெருவிலே விளையாடும்போது ஒருவனை யானையாகவைத்து அவனை யொருவன் இழுத்துக் கொண்டு திரிய, அவனைக் கண்ணபிரான்தான் மோதியடித்துத் தானிழுத்துக் கொண்டு ஓடுகின்ற லீலாவிசேஷத்தை முன்னடிகளிற் கூறினதாகவும் உரைப்பர்.

English Translation

Bright forehead Ladies, come here and see the waist-lace of this child, threaded with corals and pearls, as he runs dragging a killed rut-elephant by its trunk.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்