விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மறப்பும் ஞானமும்*  நான் ஒன்று உணர்ந்திலன்,* 
  மறக்கும் என்று*  செந்தாமரைக் கண்ணொடு,*
  மறப்பு அற என் உள்ளே*  மன்னினான் தன்னை,* 
  மறப்பனோ? இனி*  யான் என் மணியையே.   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நான் உணர்த்திலன் - நான் அறியேன்;
மறக்கும் என்று - (இப்படியிருக்க) இவன் நம்மை மறந்து விடுவன் என்று நினைத்து
செந்தாமரை கண்ணோடு - செந்தாமரை மலர்போன்ற திருக்கண்களோடு
மறப்பு அற -nமறப்புக்கு அவகாசமில்லாதபடி
என் உள்ளே - எனது நெஞ்சினுள்ளே

விளக்க உரை

மறப்பு என்பதனையும் ஞானம் என்பதனையும் நான் சிறிதும் அறிந்திலேன்; அறிவிற்கு அடைவு இன்றி இருந்த என் பக்கல் அறிவைப் பிறப்பித்தான்; பிறப்பித்தவன், நான் மறக்கக் கூடும் என்று நினைத்து, செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களாலே குளிர நோக்கிக்கொண்டு ஒருநாளும் மறக்க ஒண்ணாதபடி என்னுள்ளே வந்து நிலைபெற்று நின்றான்; அவ்வாறு நின்றவனை, எனக்கு மணியைப் போன்றவனை யான் இனி எங்ஙனம் மறப்பேன்?

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்