விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எந்தையே என்றும்*  எம் பெருமான் என்றும்,* 
    சிந்தையுள் வைப்பன்*  சொல்லுவன் பாவியேன்,*
    எந்தை எம் பெருமான் என்று*  வானவர்,* 
    சிந்தையுள் வைத்துச்*  சொல்லும் செல்வனையே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வானவர் - நித்யஸூரிகள்
எந்தை எம் பெருமான் என்று - ‘எந்தையே! எம்பெருமானே! என்று
சிந்தையுள் வைத்து - மனத்தினால் சிந்தித்து
சொல்லும் - வாயினால் தோத்திரஞ் செய்யப்பெற்ற
செல்வனை - ஸ்ரீமானாகிய எம்பெருமானை

விளக்க உரை

உரை:1
 
 ‘எந்தையே! எம்பெருமானே!’ என்று நித்தியசூரிகள் தங்கள் மனத்திலே வைத்துத் துதிக்கும்படியான செல்வனை, மிக்க தீயவினைகளையுடைய யானும் ‘எந்தையே!’ என்றும், ‘எம்பெருமானே!’ என்றும் மனத்திலே வைத்துத் தியானிப்பேன், வாயாலும் சொல்லுவேன்; இஃது என்னே!’ என்பதாம்.
 
உரை:2
 
வானவர்கள் எல்லாம் 'என் தந்தையே! என் தலைவனே' என்று தங்கள் சிந்தையில் வைத்து வணங்கும் செல்வனை (சம்பத் குமாரனை) இந்த உலகினில் பிறந்து எண்ணற்ற பாவங்களைச் செய்த நானும் 'எந்தையே' என்றும் 'எம்பெருமான்' என்றும் சொல்லி சிந்தையில் வைப்பேன். என்ன பேறு பெற்றேன்?

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்