விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நீயும் நானும்*  இந் நேர்நிற்கில்,*  மேல்மற்றோர். 
    நோயும் சார்கொடான்*  நெஞ்சமே சொன்னேன்,* 
    தாயும் தந்தையும் ஆய்*  இவ் உலகினில்,* 
    வாயும் ஈசன்*  மணிவண்ணன் எந்தையே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நெஞ்சமே - மனமே!
நீயும் நானும் - நீயும் நானுமாக
இ சேர் நிற்கின் - இந்த நிலையிலே நின்றால்
மேல் - இனிமேல்;
இ உலகினில் - இவ்வுலகத்தில்

விளக்க உரை

உரை:1

தாய்தந்தையர்களைப் போன்று பரிவுள்ளவனாய் இவ்வுலகத்தில் வந்து அவதரிக்கின்றவனாய் நீலமணி போன்ற நிறத்தையுடையவனாய் உள்ள என் தமப்பன், வணங்கு என்று கூறுதற்குத் தகுதியாகவுள்ள நீயும் வணங்கச்சொல்லுகிற நானும் ஓர் எண்தானும் இன்றி நிற்றலாகிய இம்முறையில் நின்றால,் மேல் வருகின்ற காலத்தில் ஒரு வித நோயினையும் நம்மைச் சாரச் செய்யான்; நெஞ்சமே, சொன்னேன்.

உரை:2

என் நெஞ்சமே! நீயும் நானும் இப்படி கூட்டணி அமைத்து அவனை வணங்கி வந்தால், இவ்வுலகத்தில் நமக்குத் தாயும் தந்தையுமாய் இருக்கும் ஈசன் மணிவண்ணன் என் தந்தை வேறெந்த பிறவி நோயும் நமக்கு வரும்படி விடமாட்டான். சொன்னேன் கேட்டுக் கொள்.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்