விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கண்டாயே நெஞ்சே*  கருமங்கள் வாய்க்கின்று,*  ஓர் 
    எண் தானும் இன்றியே*  வந்து இயலுமாறு,*
    உண்டானை*  உலகு ஏழும் ஓர் மூவடி 
    கொண்டானைக்,*  கண்டுகொண்டனை நீயுமே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நெஞ்சே - மனமே!
கருமங்கள் வாய்க்கின்று - காரியங்கள் பலிக்குமிடத்தில்
ஓர் எண் தானும் இன்றியே - (நம்முடைய) நினைவு ஒன்றுமேயில்லாமல்
வந்து இயலும் ஆறு - பலித்து வருகிறபடியை
கண்டாயே - பார்த்தாயோ? (எங்ஙனே யெனில்)

விளக்க உரை

மனமே, காரியங்கள் வந்து பலிக்குங்காலத்தில் நமது நினைவு சிறிதும் இல்லாதிருப்பினும், தாமாகவே பலித்ததனை இப்பொழுது பார்த்தாய் அன்றோ? பெருவெள்ளத்தால் அழியப் புக்க காலத்தில் அழியாதவாறு ஏழுலகங்களையும் உண்டு காப்பாற்றியவனை’ ஏழுலகங்களையும் ஒப்பற்ற மூன்று அடிகளாலே அளந்து தனக்கு உரித்தாக்கிக்கொண்டவனை நீயும் கண்டு கொண்டாய்.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்