விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நெஞ்சமே நல்லை நல்லை*  உன்னைப் பெற்றால்- 
  என் செய்யோம்?*  இனி என்ன குறைவினம்?*
  மைந்தனை மலராள்*  மணவாளனைத்,* 
  துஞ்சும்போதும்*  விடாது தொடர்கண்டாய்.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

இனி என்ன குறைவினம் - இனி என்ன குறையையுடையோம்?
மைந்தனை - நித்யயௌவன முடையவனும்
மலராள் மணவாளனை - திருமகள் நாதனுமான எம்பெருமானை
துஞ்சும் போதும் - நான் அகன்று மறந்த போதும்
விடாது தொடர் - நீ விடாமல் தொடர்ந்து நில்;

விளக்க உரை

உரை:1

மனமே, நல்ல தன்மையையுடையை, நல்ல தன்மையையுடையை! உன்னைத் துணையாகப் பெற்றால் எந்தக் காரியத்தைத்தான் செய்யமாட்டோம்? இனிமேல் என்ன குறைவினையுடையோம்; எப்பொழுதும் மாறாத இளமைப்பருவத்தையுடையவனை திருமகள் கணவனை நான் பிரிகின்ற காலத்தும் நீ விடாது அவனைத் தொடர்வாயாக.

உரை:2

என் மனமே! உன்னை நான் பெற்றதால் நன்றாகப் போனது. என்றும் இளையவனை, மலராளாகிய பெரியபிராட்டியின் மணவாளனை நான் தூங்கும் போதும் (என் உயிர் பிரியும் போதும்) நீ விடாது தொடர்ந்து போகிறாய். நன்று. நன்று. உன்னைப் பெற்று நான் என்ன தான் செய்ய முடியாது? இனி எனக்கு என்ன குறை?

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்