விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உச்சியுள்ளே நிற்கும் தேவதேவற்குக்*  கண்ண பிரானுக்கு,* 
    இச்சையுள் செல்ல உணர்த்தி* வண் குருகூர்ச் சடகோபன்,*
    இச் சொன்ன ஆயிரத்துள்ளே*  இவையும் ஓர் பத்து எம்பிராற்கு,* 
    நிச்சலும் விண்ணப்பம் செய்ய*  நீள் கழல் சென்னி பொருமே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இவையும் ஓர் பத்து - இந்த அத்விதீயமான பத்துப்பாசுரங்களையும்
என் பிராற்கு - எம்பெருமானுக்கு
விண்ணப்பம் செய்ய - (ஒருகால்) விண்ணபஞ் செய்யுமளவில்
நீள் கழல் - (உலகமளக்க) நீண்ட (அவனது) திருவடிகளானவை
நிச்சலும் - எப்போதும்

விளக்க உரை

திருக்குருகூரில் அவதரித்த வள்ளலாரான ஸ்ரீசடகோபர், தமது உச்சியுள்ளே எழுந்தருளியிருக்கின்ற, தேவர்கட்கு எல்லாம் தேவனான கண்ணபிரானுக்கு, அக் கண்ணபிரான் தம்மிடத்து வைத்துள்ள விருப்பத்தைத் தாம் அறிந்த தன்மையை அவன் திருவுள்ளத்திலே படும்படி உணர்த்தி, இவ்வாறு உணர்த்திய கருத்தோடு அருளிச்செய்த ஆயிரம் திருப்பாசுரங்களுள் ஒப்பற்ற இப்பத்துத் திருப்பாசுரங்களையும் இறைவன் திருமுன்னர் ஒருகால் கூறின், அவ்விறைவனுடைய நீண்ட திருவடிகள் கூறுகின்றவர்களுடைய தலைகளில் எப்பொழுதும் சேர்ந்திருக்கும்.

English Translation

This decad of the thousand songs by Kurugur Satakopan addressing Krishna, Lord of gods, with love will abidingly secure his holy lotus feet to those who sing it to the Lord, with feeling.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்