விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தோள் இணை மேலும் நன் மார்பின் மேலும்*  சுடர் முடி மேலும்,* 
  தாள் இணை மேலும் புனைந்த*  தண் அம் துழாய் உடை அம்மான்*
  கேள் இணை ஒன்றும் இலாதான்*  கிளரும் சுடர் ஒளி மூர்த்தி,* 
  நாள் அணைந்து ஒன்றும் அகலான்*  என்னுடை நாவின் உளானே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தோள் இணைமேலும் -இரண்டு திருத்தோள்களிலும்
 நல் மார்பின் மேலும் - விலக்ஷணமான திருமார்பிலும்
சுடர் முடிமேலும் - ஒளிபொருந்திய திருமுடியிலும்
தாள் இணைமேலும் - இரண்டு திருவடிகளிலும்
புனைந்த - அணியப்பட்ட

விளக்க உரை

இரண்டு தோள்களிலும் சிறந்த மார்பிலும் ஒலியையுடைய திருமுடியிலும் இரண்டு திருவடிகளிலும் அணிந்திருக்கின்ற குளிர்ந்த அழகிய திருத்துழாயினையுடைய தலைவன். தனக்கு உவமையாகப் பொருந்தத் தக்க பொருள் ஒன்றும் இல்லாதவன், மிக்க ஒளி பொருந்திய வடிவினையுடையவன், எப்பொழுதும் என்னைச் சேர்ந்து சிறிதும் அகலாதவன் ஆன எம்பெருமான் என் நாவினுள் இருக்கின்றவன் ஆனான்.
 

English Translation

He is an icon of radiant light, brilliance beyond comparison. On his shoulders, over his chest, on his crown and his radiant feet, he wears a garland of woven Tulasi flowers, My Lord. becoming dearer day by day, is on my tongue now.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்