விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஒக்கலை வைத்து முலைப் பால் உண் என்று* தந்திட வாங்கிச், 
  செக்கம் செக அன்று அவள்பால்*  உயிர் செக உண்ட பெருமான்,*
  நக்க பிரானோடு அயனும்*  இந்திரனும் முதலாக,* 
  ஒக்கவும் தோற்றிய ஈசன்*  மாயன் என் நெஞ்சின் உளானே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஒக்கலை வைத்து - இடுப்பிலெடுத்துக் கொண்டு
முலைப்பால் உண் என்று - ‘முலைப்பாலையுண்பாய்’ என்று சொல்லி
தந்திட - முலைகொடுக்க
வாங்கி - (அம்முலையைக்) கையாற்பிடித்து
செக்கம் - (அந்தப் பூதனையின்) நினைவு

விளக்க உரை

பூதனையானவள் ஸ்ரீகிருஷ்ணனைத் தன் இடையிலே வைத்துக்கொண்டு, முலையினின்றும் வருகின்ற பாலை உண்ணுவாய் என்று கொடுக்க, அதனை வாங்கித் தன்னைக் கொல்ல வேண்டும் என்று நினைத்து வந்த அக்கொலை அவளோடே போகும்படி (அவள் இறக்க என்றபடி). அப்பொழுது அவள் முலைப்பாலின் வழியே உயிரும் போகுமாறு பாலைக்குடித்த பெருமையுடையவன்; சிவபெருமானோடு பிரமனையும் இந்திரனையும் மற்றும் எல்லாப் பொருள்களையும் ஒரே காலத்தில் உண்டாக்கிய தலைவன்; ஆச்சரியத்தையுடையவன் ஆன இறைவன் என் மனத்தில் தங்கியிருக்கிறான்.

English Translation

The wondrous Lord instantly by his will created Siva, Indra, Brahma and all other gods and all the world. He is my darling child Krishna who took such from Putana's poison breast. My Lord has-now risen to my bosom.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்