விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உடன் அமர் காதல் மகளிர்*  திருமகள் மண்மகள் ஆயர்- 
    மட மகள் என்று இவர் மூவர் ஆளும்*  உலகமும் மூன்றே,*
    உடன் அவை ஒக்க விழுங்கி*  ஆல் இலைச் சேர்ந்தவன் எம்மான்,* 
    கடல் மலி மாயப் பெருமான்*  கண்ணன் என் ஒக்கலையானே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உடன் அமர் காதல் - கூடவே அமர்ந்திருக்கைக்கு விருப்பமுள்ள
மகளிர் - பிராட்டிமார் (யாவரென்னில்)
திருமகள் - ஸ்ரீமஹாலக்ஷ்மி
மண் மகள் - பூமிப்பிராட்டி
ஆயர்ம மகள் - இடைக்குலத்துப்பெண்ணாகிய நப்பின்னைப்பிராட்டி

விளக்க உரை

உடனே அமரவேண்டும்படியான காதலையுடைய மனைவிமார்கள் பெரிய பிராட்டியாரும் பூமிப்பிராட்டியாரும் இடையர்குலத்தில் அவதரித்த நப்பின்னைப்பிராட்டியாரும் என்னும் இவர் மூவருமாவர்; ஆளப்படுகின்ற உலகங்களும் மூன்றேயாகும்; அவ்வுலகங்களை எல்லாம் ஒருசேர ஒரே காலத்தில் விழுங்கி ஆலந்தளிரில் சேர்ந்து தங்கியிருந்தவன்; எனக்குத் தலைவன்; கடலைக்காட்டிலும் மிகப் பரந்த வியக்கத்தக்க குணங்களையும் செயல்களையுமுடையவன்; கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவன் ஆன இறைவன் என் மருங்கிலே தங்கியிருக்கின்றவன் ஆனான்.

English Translation

Three queens Bhu, Sri and Nila love to be seated with him. The worlds that he rules are also three. Lord more wondrous than the ocean, he swallowed them all and slept as a child floating on a fig leaf. He has risen to my lap now.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்