விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அருகல் இலாய பெரும் சீர்*  அமரர்கள் ஆதி முதல்வன்,* 
    கருகிய நீல நன் மேனி வண்ணன்*  செந்தாமரைக் கண்ணன்,* 
    பொரு சிறைப் புள் உவந்து ஏறும்*  பூமகளார் தனிக் கேள்வன்,* 
    ஒருகதியின் சுவை தந்திட்டு*  ஒழிவு இலன் என்னோடு உடனே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அருகல் இல் ஆய - ஒருநாளும் குறைபடுதலை உடையதல்லாத
பெருசீர் - சிறந்த திருக்குணங்களையுடையவனும்
அமரர்கள் - நித்யஸூரிகளுக்கு
ஆதி முதல்வன் - தலைவனும்
கருகிய நீலம் நல்மேனிவண்ணன் - கறுத்த நீலமணிபோல் விலக்ஷணாமன திருமேனி நிறத்தையுடையவனும்

விளக்க உரை

‘குறைதல் இல்லாத பெரிய நற்குணங்களையுடைய அழிவில்லாத தேவர்களுடைய செயல்களுக்கு எல்லாம் காரணனான தலைவன், மிகப்பெரிய நீலமணி போன்ற நிறம் பொருந்திய திருமேனியையுடையவன், செந்தாமரை போன்ற திருக்கண்களையுடையவன், மகிழ்ச்சியின் மிகுதியினால் அடித்துக்கொள்ளுகின்ற சிறகுகளையுடைய கருடப்பறவையின்மேல் மகிழ்ந்து ஏறி வீற்றிருக்கும் தலைவன், திருமகளாருடைய ஒப்பற்ற கணவன் ஆன இறைவன், என்னோடு கூடி நின்று ஒரு வழியால் உண்டாகும் இனிமையைத் தந்து நீங்குகின்றான் இலன்; அதாவது, பல வழிகளாலும் எனக்கு இன்பத்தைத் தருகின்றான்,’ என்கிறார்.

English Translation

Faultless Lord of infinite glory, first cause of the celestials, dark gem-hued Lord of lotus-red eyes, peerless spouse of Lakshmi, -he delights in riding the Garuda bird of fierce wings. He has entered into me, giving me the bliss of union!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்