விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கலந்து என் ஆவி,*  நலம்கொள்நாதன்,* 
    புலன் கொள் மாணாய்,*  நிலம்கொண்டானே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கலந்து - ஒரு நீராகக்கலந்து
என் ஆவி - எனது ஆம்மாவினுடைய
நலம் - அடிமைத்தனமாகிய நன்மையை
கொள்நாதன் - தனக்காக்கிக் கொண்ட ஸ்வாமியானவன்
புலன்கொள் மாண் ஆய் - (கண் முதலிய) இந்திரியங்களைக் கவர்ந்து கொள்கின்ற (மநோஹரமான) வாமந ப்ரம்மசாரி சேஷத்தையுடையவனாய்

விளக்க உரை

உரை:1

என்னைத் தனக்கே அடிமைப்படுத்திக் கொண்டானென்கிறார். மஹாபலியைத் தன் வசப்படுத்தி, அவன் தன்னதாக அபிமானித்திருந்த பொருளைத் தன்னதாக்கிக் கொண்டதுபோலவே என்னோடே ஒரு நீராகக் கலந்து என்னாத்மாவைக் கொண்டான் நான் எனக்குரியேனாயிருக்கிற விருப்பைத் தவிர்த்தான்.

உரை:2

என் உடலில் கலந்து உயிரினது நலத்தைக்கொண்ட இறைவன், இந்திரியங்களைக் கொள்ளை கொள்ளுகின்ற குறுகிய பிரமசாரியாகி, மகாபலியிடம் மூவடி மண்ணை வாங்கினான்.

English Translation

Blending into my soul, he bears my good. As a charming lad he measured the Earth.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்