விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அமரர் முழுமுதல்*  ஆகிய ஆதியை,* 
  அமரர்க்கு அமுது ஈந்த*  ஆயர் கொழுந்தை,*
  அமர அழும்பத்*  துழாவி என் ஆவி,* 
  அமரத் தழுவிற்று*  இனி அகலும்மோ.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அமரர் - நித்யஸூரிகளுடைய
முழு - ஸ்வரூபம் ஸ்திதி ப்ரவ்ருத்தி ஆகிய எல்லாவற்றிற்கும்
முதல் ஆகிய - ஹேதுவாய்க்கொண்டு
ஈந்த - (கடல்கடைந்து எடுத்துக்) கொடுத்தவனும்,
ஆயர் கொழுந்தை - இடையர்களுக்குத் தலைவனுமான எம்பெருமானை

விளக்க உரை

 ‘நித்தியசூரிகளுடைய செயல்களுக்கு எல்லாம் காரணனாய் இருக்கின்ற தலைவனை, தேவர்கட்கு அவர்கள் விரும்பிய அமுதத்தைக் கொடுத்த ஆயர்கட்குத் தலைவனை, என்னுடைய உயிரானது கிட்டிச் செறிந்து எங்கும் புக்கு அனுபவித்து ஒரே பொருள் என்று கூறலாம்படி கலந்தது; ஆதலால், இனிமேல், விட்டு விலகுமோ?’ என்கிறார்.

English Translation

The Lord who gave ambrosia to the gods, is the darling-child of the cowherd clan. My souls has blended my being into him. How can the thought of separation arise again?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்