விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  என்னை நெகிழ்க்கிலும்*  என்னுடை நன் நெஞ்சம்- 
  தன்னை,*  அகல்விக்கத் தானும்*  கில்லான் இனி,*
  பின்னை நெடும் பணைத் தோள்*  மகிழ் பீடு உடை,* 
  முன்னை அமரர்*  முழுமுதல் தானே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பிள்ளை - நப்பின்னைப்பிராட்டியினுடைய
நெடு - பெரிய
பணை - சற்றுடைத்தான
தோள் -  தோள்களோடே அணையப்பெற்றதனாலுண்டான
மகிழ பீடு உடை - ஆநந்தப் பெருமையை உடையவனும்

விளக்க உரை

என்னைப் பிரித்தாலும் என்னுடைய குற்றம் அற்ற மனத்தினைப் பிரிப்பதற்குத் தானும் ஆற்றலுடையவன் அல்லன்; ‘என்னை?’ எனின், நப்பின்னைப் பிராட்டியாருடைய நீண்ட மூங்கில் போன்ற தோள்களை மகிழ்கின்ற பெருமை பொருந்திய முதன்மை பெற்ற - நித்தியசூரிகளுடைய எல்லாச் செயல்களுக்கும் காரணமாய் இருக்கின்ற - இறைவன் ஆதலால் என்க

English Translation

The Lord is first cause of the ancient celestials. He enjoys the embrace of Nappinnai's bamboo-like arms. Even if he desires to forsake me now, my heart is so good, he has not the power to leave and go.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்